பக்கம்:பாட்டுத் திறன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 5 இம்பர் காட்டிற் செல்வமெலாம் எய்தி அரசாண் டிருந்தாலும் உம்பர் காட்டிற் கற்பகக்கா வோங்கு நீழல் இருந்தாலும் செம்பொன் மேரு அனையபுயத் திறல்சே ரி.ராமன் திருக்கதையில் கம்ப காடன் கவிதையிற்போல் கற்றோர்க் கிதயம் களியாதே ? என்று அதன் கவிதைச் சிறப்பை எடுத்தோதுகின்றார். இங்ங்ணமே 'பாரதியும் பட்டிக்காட்டானும் என்ற கவிமணியின் பாடல்கள் பாரதியாரின் கவிதைச் சுவையை எடுத்துரைக் கின்றன.

  • கண்ணன் காதலன்' எனக்கொரு

களிய முதமடா! விண்ண முதமுமே. அதனை வெல்ல மாட்டாதடா!' என்ற பாடல் 'கண்ண பாட்டு' என்ற கவிதையை அநுப வித்த கவிமணியின் வாக்கு. இங்கனம் ஒருசில பாடல்களால், தான் படித்த ஒருசில கவிதைகளின் அநுபவத்தை விரித்துரைக் கின்றார் கவிமணி. கவிதைகளைப் படித்துச் சுவைக்கும் பழக்கமுடையவர்கள் மேற்கூறிய கவிதையதுபவப் பாடல் களின் பொருளை-அவை கூறும் உண்மையை-நன்றாக அறி வார்கள். கவிதை இன்னது என்று ஒரளவு அறிந்துகொண்டு அதனைச் சுவைப்பது ஒருவகை; அதனை அறியாமலே சுவைப் பது மற்றொரு வகை. பெறும் அநுபவம் ஒன்றேயாயினும் அவ் வநுபவத்தின் தரத்தில் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஒவல்டின்' என்ற ஒருவகைப் பானத்தைப் பருகினால் அது எல்லோருக்குமே இன்பத்தைத்தான் தரும். என்றாலும், அப் பானத்தில் இன்னின்ன சத்துகள் சேர்ந்துள்ளன என்றும், அச் சத்துகளின் அடிப்படைத் தன்மைகள் இவை என்றும் புரிந்துகொண்டு அதனைத் துய்த்தற்கும், ஒன்றுமே தெரியாமல் ஒவல்டினைப் பருகித் துய்த்தற்கும் வேறுபாடு உண்டு; அவ் 7, கம்: : யணத் தனியன், 8, 1ாட்டு. 17,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/17&oldid=812388" இலிருந்து மீள்விக்கப்பட்டது