பக்கம்:பாட்டுத் திறன்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 பாட்டுத் திறன் காடடவும் கூடும். இயற்கைக் கூத்தை ஒரு வடிவமாகப் புனைந்து காட்டிய அம்பலக் கூத்தன் அழகில் ஈடுபட்ட திருநாவுக்கரசர், குணித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணிறும் இனித்தம் உடை ய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇங்த மாநிலத்தே' என்று வேண்டுவதை ஈண்டு எண்ணி மகிழலாம். இதே அம்பலக் கூத்தன் அழகில் சுந்தரமூர்த்தி நாயனார் எவ்வாறு ஈடுபட்டார் என்பதையும் காண்போம். ஆர்வத்துடன் தில்லை யம்பதியின் திருக்கோவிலுள் புகுந்ததும் பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடும் மூர்த்திக்குமுன் கிற்கின்றார் சுந்தரர். அவன் அருட்கூத்தில் மலர்ந்த பேரின்ப வெள்ளத்தில் மூழ்கிவிடு கின்றார். ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள அளப்பருங்கரணங்கள் நான்கும் சிங்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும் திருந்துசாத் துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்." மூர்த்திக்கு முன்னால் கிற்கும்பொழுது அவருடைய ஐந்து பொறிகளில் கண் ஒன்றே உணர்வுடையதாகி இருக் கின்றது, அஃது ஏனைய நான்கு பொறிகளின் ஆற்றல்ையுக் பெற்று மூர்த்தியின்பால் பதிகின்றது. அங்கே பலவகை ஒலிகள் இருந்தும் அவர் காதில் விழவில்லை. மணம் இருந்தும் அவர் மூக்கு உணரவில்லை. வெப்பத்தையும் தட்பத்தையும் உடல் உணரவில்லை. வாயும் உணர்வுடையதாகத் தோன்றவில்லை. 18. தேவாசம் அடங்கன்முறை : செய்-4941, 8 திருத்தொண்டர் புராணம் தடுத்தாட்கொண்ட-108