பக்கம்:பாட்டுத் திறன்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 163 கண் ஒன்றே கூத்தன் அழகை விழுங்கியது. அகக் கரணமாகிய மன்ம், அஃதாவது அந்தக்கரணம், எவ்வாறிருந்தது? அந்தக் கரணம் ஒன்றாயினும், செயல்களால் நான்கு பகுதியாகக் கூறப் பெறுகின்றது. அவை மனம் புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை. மனம் ஒன்றை கினைக்கும்; அதனால் சலிப்படையும், பிறகு எங்கும் சென்று தாவும். புத்தியோ பொருள்ை “இத்தகையது, அத்தகையது என்று வேறு பிரித்தறியும். சித்தம் இது செய்ய வேண்டும் என்ற உறுதி பூணும். அகங்காரம் என்பது எப்பொழுதும் தான் இன்னான் என்ற உணர்வுடன் இருப்பது. இந்த நான்கிலும் ஒருமைப்பாடாகிய உறுதியைப் பெறும் பகுதியே சித்தம் ஆகும். அதைச் சிந்தை எனவும் வழங்க லாம். திருக்கூத்தனுடைய காட்சியில் ஒன்றி கிற்கும் சுந்தர மூர்த்தியின் அந்தக் கரணத்தின் நான்கு கூறுகளில் மூன்று செயற்படவில்லை. மனம் வேறொன்றையும் கினைக்காமல் அடங்க, புத்தி ஆராயும் உணர்வின்றி ஒடுங்க, அகங்காரம் தான் இன்னான் என்று உணரும் ஆற்றலை இழக்க, சிந்தைமட்டிலும் கண்ணால் காணும் காட்சியில் தோய்ந்து கிற்கின்றது. மனிதர்கட்கு முக்குணங்கள் உண்டு. அவை சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பவை. சாத்துவிகம் அன்போடமைக் திருப்பது; இராசதம் மிடுக்கும் படபடப்பும் உடையது; தாமதம் இழிந்த செயலைச் செய்வதற்கு மூலகாரணமாக இருப்பது. மனத்தில் இம் முக்குணங்களும் விரவியே உள்ளன். சிலருக்குத் தாமதகுணம் விஞ்சியும், மற்றும் சிலருக்கு இராசதகுணம் மிகுந்தும், இன்னும் சிலருக்குச் சத்துவகுணம் அதிகப்பட்டும் இருக்கும். சத்துவகுணம் மிக்கவர்களே.உலகத்திற்கும் தமக்கும் நன்மையைத் தேடுபவர்கள். இக்குணம் மிகுதி ஆகஆக ஏனைய இரண்டும் மங்கிவிடும். இறைவனுடைய நினைவாகவே இருக் கும் இயல்புடையவர்களிடம் தத்துவத்ணமே கோர்ந்து நிற்கும். சுந்தரர் திருக்கூத்தன் திருக்காட்சியில் திண்ணையும் சிந்தையை யும் பறிகொடுத்து சிற்கையில் சிறிதளவு நின்ற் தாமத இராசத் குணங்களும் ஒடுங்கிப்போக்ச் சத்துவகுணம் மட்டிலும் ஒளிர் கின்றது. இறைவன் மயமாகக் கண்னும் கருத்தும் அமைய அவர் உள்ளம் சத்துவகுணம் என்னும் மணத்தை வீசி மலர்கின்றது. இங்கிலையே சமாதி நிலைக்கு அழைத்துச்செல்வது. சுந்தரர் கண்ணைத் திறந்தபடியே சமாதி நிலையிலுள் ளார். இந்துவாழ்சடையான் ஆடும் ஆனந்தக் கூத்தைக் கண்டு