பக்கம்:பாட்டுத் திறன்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பாட்டுத் திறன் சிற்கும் சுந்தரரின் புறக்கண்ணாகிய வாயிலின் ೧ಿರ್ಲಕ್ಲ ஆனந்தக் கூத்தன் உள்புகுகின்றான்; அகக் கண்ணிலும் புகுகின்றான். அங்குள்ள நான்கு வாயில்களிலும் சித்தம் என்னும் வாயிலே திறந்துள்ளது. அதன் வழியாகக் கூத்து புகும்பொழுது அவ்வறையில் பிற மணங்களெல்லாம் ஆகன றொழியச் சத்துவகுண மணமே கிரம்பி நிற்கின்றது. இந்நிலை யில் சுந்தரர் கண் திறந்தபடியிருந்தும் காண்கின்றார் இல்லை; சித்தமும் செயற்படவில்லை; சத்துவகுண மணமும தலை காட்டவில்லை அவர் இறைவன் அருட்கூத்தில் மலர்ந்த பேரின்ப வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றார். இவ்வாறு ஆன்மா ஒருமுறை மலர்ந்துவிட்டால் அஃது என்றும் வாடாது. இந்த அநுபவத்தைச் சுந்தரர் பெறுகின்றார், அதைச் சேக்கிழார் பெருமான் கற்பனையில் கண்டு நமக்குத் தருகின்றார். அவர் பாடலைப் படிக்கும் நாமும் அந்த அநுபவத்தைப் பெற்றால் அதுவே கவிதையநுபவம் ஆகும். இவ்வாறு உணர்வு சிலையை நிலைபேறாக்குவித்து கம்மால் அளந்தறிய முடியாத பெரும்பயனை நல்க வல்லவை அழகுணர்ச்சி பொதிந்துள்ள கவிதைகள். இத்தகைய கவிதை களைப் படித்துத் துய்த்தல் மிகவும் இன்றியமையாதது. சிறுவர் களையும் இளைஞர்களையும் இவற்றில் ஈடுபடச் செய்வது மிகவும் வேண்டப்படுவ தொன்று. பாட்டு-உரைநடை வேற்றுமை : செய்யுள் சீரும் தளையும் தொடையும் அடியும்கொண்டது; ஒலிநயம் உடையது. உணர்ச் சியும் கற்பனையும் பொருந்திய செய்யுள் பாட்டு நிலையைப் பெறும். உணர்ச்சியும் கற்பனையும் இல்லாமல் சோதிடம், மருத்துவம், திே முதலியவற்றை எடுத்துரைக்கும் செய்யுள் எல்லாம் பாட்டு எனத் தகாது. எனவே, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை பாட்டு எனல் பொருந்தாது. திருக்குறள் இதற்கு ஒரு விதிவிலக்கு. உரைநடை மக்கள் பேசும் முறையில் சொற்கள் அமைய வாக்கியங்களாக எழுதப்பெறுவது. இதற்கு எதுகையோ மோனையோ யாப்போ அமையவேண்டும் என்பதில்லை; தேவையும் இல்லை. சிலசமயம் உரைநடையும் பாட்டின் நிலைக்கு உயர்வதுண்டு. உணர்ச்சியும் கற்பனைவளமும் உடைய உரைநடை ஒலிநயமும் கூடி அமைந்துவிட்டால், யாப்பு