பக்கம்:பாட்டுத் திறன்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 165 அமைதி பெறாவிடினும் அது பாட்டு என்ற நிலையை அடைந்து விடுகின்றது. இக்காலத்தார் அதனை உரைநடைப்பாட்டு-வசன கவிதை'-என்று போற்றுகின்றனர். பாரதியாரின் கவிதைத் தொகுதியிலுள்ள காட்சி, சக்தி போன்றவை இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகும். உரைக்கும் பாட்டிற்கும் உள்ள வேற்றுமையை மறைமலையடிகள் இவ்வாறு கூறுவர்: 'பால் கறந்த மாத்திரையே யுண்பார்க்குஞ் சுவை பயக்கு மாயினும், அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின் னுண்பார்க்குக் கழிபெருஞ்சுவை தருதல்போலவும், முற்றின கருப்பங்கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃதினிமை விளைக்குமாயினும் மேலும் அதனைப் பாகுதிரளக் காய்ச்சிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்பார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல்போலவும், உரையும் கலம் பயப்ப தொன்றேயாயினும் அதனைக் காட்டினும் பாட்டாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம். கறந்தபால் நீராளமாய் நெகிழ்ந்திருத்தலின் அதன்கண்ணுள்ள சுவை மிகுந்து தோன்றாது குறைந்தே காணப்படுகின்றது. அது போல, உரையும் ஒரு வரம்பின்கட்படாது சொற்பெருக்க முற்று நடைபெறுதலால் அதன்கட்புதைந்த பொருளும் ஆழமாகலின்றி அச்சொற்களோடு ஒத்து ஒழுகி மெல்லிதாய் விடுகின்றது. மற்றுக் காய்ச்சித் திரட்டிய பாற் கட்டியுஞ் சருக்கரைக் கட்டியும் இறுகித் திண்ணென்ற உருவுடைய வாயிருத்தலின் அவற்றின்கட் சுவை முதிர்ந்து தோன்றா கிற்கின்றது. அது போலச் செய்யுளும் எழுத்து, அசை, சீர் தளை, அடி தொடைகளானமைந்த பாவாய் ஒரு வரம்புபட்டுச் சொற்சுருக்க முடைத்தாய் நடத்தலின் அதன்கட் புதைந்த பொருளும் அவற்றோடு ஒப்ப ஒழுகித் திட்பமும் ஆழமும் உடையதாகின்றது. பாட்டெல்லாம் அறிவு சிலை"யைப் பற்றிக் கொண்டுபோய் உயிர்களின் உணர்வு நிலையை எழுப்பிவிடுவதாகும். உரையெல்லாம் அறிவு நிலையைப் பற்றியே நிகழுமல்லது அதன் மேற்சென்று உணர்வு நிலையைத் தொடமாட்டாதாகும். பெரியதோர் மலை முழைஞ்சினுட் பொன்னும் மணியுஞ் சிதறிக்கிடத்தல் ஒரு வியப்பன்று: ஒரு சிறு 17. a son assions - Prose-poetry. - 18. .exe, kes ", Cognition 19. "-"risi: "" Affection,