பக்கம்:பாட்டுத் திறன்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பாட்டுத் திறன் பாட்டு - செய்யுள் வேறுபாடு : இரண்டற்கும் சீர் தளை அடி தொடை முதலியவை வேண்டும்; ஒலிநயமும் வேண்டும். செய்யுளுக்கு உணச்சியும் கற்பனையும் வேண்டுமென்ப தில்லை; இதனால்தான் பண்டையோர் எல்லாவற்றையும் செய்யுளிலேயே எழுதினர். இலக்கியம் மட்டுமன்றி மருத்துவம், சோதிடம், நீதி முதலியனவும் செய்யுள் வடிவம் பெற்றன. ஆனால், பாட்டிற்கு உணர்ச்சியும் கற்பனையும் மிகவும் இன்றியமையாதவை. ஒலிநயம் சிறிது குறையினும் இவை இரண்டும் உயிர்போன்றவை; நீக்க முடியாதவை. இதனால் தான் இவை இரண்டும் பெற்று ஓரளவு ஒலிநயம் குறைந்த சங்கப்பாடல்கள் இன்றும் சிறந்த இலக்கியங்களாகத் திகழ் கின்றன. பாட்டு அல்லது கவிதைக்கும் செய்யுளுக்கும் உள்ள வேறு பாட்டை ஓர்எடுத்துக்காட்டால் விளக்கலாம். பாம்பே ரஸ்குல்லா என்பதும் குலோப்ஜாமுன் என்பதும் வடநாட்டு இனிப்பு வகை கள். இவை இரண்டும் வடிவத்தில் சற்று மாறுபடினும் சுவையில் கிட்டத்தட்ட ஒன்றுதான். இரண்டும் ஜீரா' எனப்படும் சருக் கரைப்பாகில் மிதந்துகொண்டிருக்கும். உண்பவர்கள் கரண்டி யினால் அதனை வெட்டி ஜீராவுடன் சேர்த்து உண்பர். அவற்றை போலவே களிமண்ணால் செய்து அதே கிறத்துடன் அமைத்து அந்த ஜீராவில் மூழ்கடிக்கச் செய்து விடலாம். உண்பவர்கள் இனிப்புப் பொருளைச் சுவைத்துச் சுவைத்து உண்பர். களிமண்ணால் செய்யப்பெற்ற பொருளை வெட்டி வாயில் வைத்ததும்- அது ஜீராவுடன் கலந்திருந்த போதிலும் முகத்தில் அசடு தட்டும்; அதன் சுவையற்ற தன்மையும் புலனாகும். பாம்பே ரஸ்குல்லா அல்லது குலோப்ஜாமுனுக்கும் அவற்றைப் போலச் செய்யப்பெற்ற் களிமண் பொருளுக்கும் வேற்றுமையை உண்பவர் உணர்வது போலவே, கவிதையையும் செய்யுளையும் படிப்போர் அவை இரண்டற்குமுள்ள வேற்றுமையை உணர்வர். கீழ்க்கண்ட இரண்டு பாடல்களையும் படித்துப் பார்த்தால் இவ்வேற்றுமை நன்கு புலனாகும். கயரதத் துரகமாக் கடலன், கல்வியன், தயரதன் எனும்பெயர்த் தனிச்சொல் கேமியான்,