பக்கம்:பாட்டுத் திறன்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 169 புயல்பொழி தடக்கையான் புதல்வன், பூங்கனை மயல்விளை மதனற்கும் வடிவில் மேன்மையான்?? என்பது கம்பனின் பாடல், இராமன் வில்முறித்த செய்தியை லேமாலை என்ற தோழிவாயில் வைத்துக் கூறுவது. அண்ண னானவன் தம்பிக்கு மூத்தவன்; திண்ணை யானது தெருவில் உயர்ந்தது; கண்ண னானவன் கண் இரண் டுள்ளவன் வெண்ணெ யானது பாலில் விளைவதே என்பது ஒரு தனிப் பாடல்; சொற்பொழிவுகளில் அடிக்கடி காட்டப்பெறுவது. உண்மையான கவிதையில் உயிர் இருக்கும்; களை இருக்கும். மட்டரகமான செய்யுளில் உயிர் இருக்காது; சவம்போல் கிடக்கும். உறங்கும் மனிதனையும் சவத்தையும் கண்டு பிடிப்பதைப் போல்தான் கவிதையின் மூச்சை நாம் உணர வேண்டும். ஒர் ஆங்கிலத் திறனாய்வாளர், கவிதைக்கும் செய்யு ளுக்கும் உள்ள வேற்றுமை மின்னேற்றம் பெற்ற மின்கலத் திற்கும் மின்னேற்றம் எரிந்து போன மின்கலத்திற்கும் உள்ள வேற்றுமை யாகும்' என்று கூறியிருப்பதை ஈண்டுச் சிந்தித்துப் பார்த்தல் சாலப் பயன்தரும். புட்பராகத்திற்கும் அசல் வைரத்திற்கும் தரம்கண்டு சொல்லும் வல்லுநர்களைப் போன்ற கவிதைத் திறனாய்வாளர்களுக்குத்தான் கவிதையின் தரம் தெளிவாகப் புலனாகும். - - மேற்கூறியவற்றால் கவிதை அல்லது பாட்டு இன்னதென்பது தெளிவாகும் பாட்டு இன்னதென்பதை இலக்கண விதிபோல் ஒரு வரையறைக்குள் அடக்கிக் கூற இயலாது போயினும் பாட்டு 22. பாலகாண் - கார்முகம்-58. 23 “The differenee between verse and Poetry is like wise. difference between two dry cell batteries one charged with electricity and the other dead”