பக்கம்:பாட்டுத் திறன்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பாட்டுத் திறன் இன்னதென்பதை ஓரளவு மனத்தால் உணரமுடிகின்றது, 'உணர்ச்சி, கற்பனை, ஒலிநயம். அணிகலன்கள், தொடைநயம். சுவைகள் முதலியவை அமையச் செந்தமிழ்ச் சொற்களால் நல்ல வடிவத்துடன் அமைவதே கவிதை அல்லது பாட்டு ஆகும்' என்று சொல்லி வைக்கலாம். அணிகலன்கள் பாட்டில் அமையி னும் அமையலாம்; அமையாதும் போகலாம். அவை அமைய வேண்டும் என்ற நிபந்தனையொன்றும் இல்லை. ஆனால், கவிதை வாழ்க்கையின் உண்மைகளை-மன்பதைக்கு என்றும் தோன்றாத் துணையாக விற்கும் உண்மைகளை-உட்கிடக்கை யாகக் கொண்டு கிற்கலேண்டும். அவை வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டுபவைகளாக அமையவேண்டும். அப்படியாயின் அவை முந்திரிக் கொட்டைப்போல் கவிதையின்முன் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பது பொருளன்று. அவை பாவிக மாக-கவிஞனுடைய மனோபாவமாக-அமைதல் சாலச் சிறப் புடைத்து. இக்கூறுகள் ஒவ்வொன்றையும் சற்று விரிவாகக் காண்போம்.