பக்கம்:பாட்டுத் திறன்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பாட்டுத் திறன் ஒடவிட்ட தங்கம் போலப் பரவிவருகின்றனவாம்; உருக்கிய தங்கமாயினும் என்ன மாயத்தாலோ குடு குறைந்திருக்கின்ற தாம். இத்தகைய ஒளியுடன் அக்காட்சியில் இனிமையும் கலந்து கொஞ்சுவதைக் காண்க. இதைத்தான் கவிஞன் தழல் குறைத்துத் தேனாக்கி’ என்று மிக இங்கிதமாக வெளியிட்டுள் ளான். நாமும் அக்காட்சியின்பத்தில் மூழ்கி அதை அநுபவிக் கின்றோம். கவிஞன் தான் அநுபவித்தவர்.ஆ.ஆ அதுபவிக்கச் செய்கின்றான். இதை ஓர் அறிஞன் வருணித்திருந்தால் வேறுவிதமாக வருணித்திருப்பான். அவனது வருணனைப்போக்கு அறிவியல் அடிப்படையில் தான் சென்றிருக்கும். அதனால் வெறுஞ் செய்திகளை காம் அறியலாமேயன்றி அநுபவத்தை உணரமுடியாது. கவிஞன் அநுபவித்தவற்றையெல்லாம் கம்மையும் அநுபவிக்கச் செய்யத் துணையாக இருப்பது அவனது கற்பனை, கற்பனை இல்லாதவர்கட்குக் காலைக் கதிரவனின் காட்சி யாதொரு விதமான உணர்ச்சியையும் உண்டாக்குவதில்லை. ஆனால், அதே காட்சியைக் கவிஞன் காணும்பொழுது தன்னை மறந்து விடுகின்றான். காணும் கதிரவன், காண்டவனாகிய கவிஞன், காண்பதால் அவன் பெறும் உணர்ச்சி ஆகிய மூன்றும் ஒன்றாகி அவன் வேறு ஒர் உலகிற்குச் சென்றுவிடுகின்றான். கதிரவனின் காட்சி அவனுடைய மனத்தில் எத்தனையோ எண்ணக் கோவைகளை உண்டாக்கி விடுகின்றது. கதிரவனைக் காணும் கம்மனத்தில் கனவிலும் தோன்ற முடியாத கற்பனைகள் கவிஞன் மனத்தில் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் வெறும் நினைவுக்கோவைகள் அல்ல. அவை அவன் மனத்தில் ஆழ்ந்த அடித்தளத்திலிருந்து தோன்றி உணர்ச்சிப் பெருக்கைக் கிளப்பிவிடும் அமுத ஊற்றுக்கள்.அந்த உணர்ச்சிப்பிடிப்பிலிருந்து மீண்ட பிறகே கவிதை பிறக்கின்றது. கவிதை வடிவான் அக்கற்பனையிலிருந்தே கவிஞன் அநுபவித்த உணர்ச்சியை நாமும் பெறுகின்றோம். பாடலிலுள்ள சொற்கள் காம் அறிந்தவைகளாக இருப்பினும், அவை கவிதை வேலிக்குள் அமைந்துகிடக்கும்பொழுது புதியதோர் ஆற்றலைப் பெற்றுவிடு கின்றன. அவற்றைக் கொண்டு கவிஞன் புதிய இரசவாதமே” செய்துவிடுகின்றான். இன்னும் ஓர் எடுத்துக்காட்டு : சாட்டைகொண்டு பம்பரம்