பக்கம்:பாட்டுத் திறன்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 盘臀 என்று வருணிப்பர். காவல் மரத்தருகில் தாம் கண்ட காட்சி களனைத்தையும் கவிஞர் கூறியிருப்பாராயின், கற்பனை இவ் வாறு சிறந்திருக்காது. தம் உள்ளம் விழைந்த காட்சிக்கு வேண் டாதவற்றை விட்டு, வேண்டிய சிலவற்றைத் தருவித்துக் கூட்டி ஒர் அழகிய கற்பனை அமைத்துவிடுகின்றார் கவிஞர். இன்னுமோர் எடுத்துக்காட்டு: மஞ்சுசூழ் சித்திரகூட மலை'யில் யானைகள் ஏராளமாக உள்ளன. ஒர் ஆண்யானை குல் கொண்டுள்ள தன் இளம்பிடியின்மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளது. ஒரு மலையிடுக்கில் பெரிய தேன்கூடு கட்டப் பெற்று அதில் தேன் ததும்பி சிற்கின்றது. தேனிக்கள் அதனை நெருங்கி மொய்த்துக் கொண்டுள்ளன. ஆண்யானை அண்மை யிலுள்ள மரத்தினின்று ஒரு தழைக் கொத்தினை ஒடித்து அதனைக் கொண்டு அம்மழலை வண்டுகளை ஒச்சி கிற்கின்றது. பிறகு அந்தத் தேன்கூட்டினை அப்படியே அசையாமல் தன் துதிக்கையினால் வாங்கிச் சூல்கிறைந்து பருகுவதற்கும் சிரமப் படும் தன் பிடியின் வாயில் பருகுமாறு தந்து சிற்கின்றது. இதனைக் கம்பகாடன், - உருகு காதலில் தழைகொண்டு மழலை வண்டு ஒச்சி, முருகு நாறுசெங் தேனினை முழைகின்றும் வாங்கி, பெருகு சூல்இளம் பிடிக்குஒரு பிறைமருப்பியானை பருக வாயினில் கையில்கின்று அளிப்பன பாராய்!" (முருகு-மணம்; நாறு-வீசுகின்ற; முழை-கல் இடுக்கு பெருகுகுல்-முதிர்ந்த கருப்பம்; மருப்பு:தந்தம்} என்று சொல்லோவியம் திட்டுகின்றான். மேற்கூறிய அம்மூவ னாரைப் போலவே இக் கவிஞனும் தான் விரும்பும் கற்பன்ை நாடகத்தை கடத்துகின்றான். உள்ளதை உணர்ச்சியுடன் கூறும்பொழுது கூட்டலும் குறைத்தலும் திரிபும் கேர்தல் இயல்பு. அறிவு எதனையும் 8. அயோ.சித்தின்-10,