பக்கம்:பாட்டுத் திறன்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பாட்டுத் திறன் அளந்து அறியும் தன்மையுடையது. உணர்ச்சியோ குறித்த ஒன்றை ஆழ்ந்து உணரும் தன்மையது. எனவே பின்னைய செயலில் குறித்த ஒன்றினைத் தவிர, ஏனையவை அவ்வளவு தெளிவாக சிற்பது இல்லை. ஒரு பொருளின் ஒரு கூறுமட்டிலும் தெளிவாக-மிகுதியாக-உணர்த்தப்பெற, மற்றவை மங்கு கின்றன; அல்லது மறைகின்றன. ஒன்றை எடுத்துக்காட்டுவ தற்காக மற்றவற்றை வேண்டும் என்றே திரையிட்டு மறைப்ப தாகக் கூறுதல் பொருந்தாது. அங்கனம் மறைத்துக் கூறுவது கட்சிச் சார்புடைய செய்தித் தாள்களின் வேலை; அதனால்தான் ஒரே நிகழ்ச்சியினைக் குறித்துப் பல காளிதழ்கள் பலவாறாகத் தலையங்கம் தீட்டுகின்றன! கவிதையில் உணர்ச்சியின் கார்ண மாக ஒன்று சிறந்து சிற்றலால் மற்றவை சிறப்பிழந்து மறை கின்றன என்று கொள்வதே ஏற்புடைத்து. இங்ங்ணம் ஒன்றில் சிலவற்றைக் குறைப்பதால் பொருள் விளக்கம் கன்கு ஏற்படுகின்றது. உடலியலை விளக்கும் வண்ணப்படங்களில் உடல் முழுமையும்-தசைகள், நரம்புகள், ! குருதிக் குழல்கள் முதலியவை அனைத்தையும்-ஒரே படத்தில் எழுதிக் காட்டுவதில்லை. அதனால் நரம்புகளை மட்டிலும் தெளிவாகக் காண விழைவார்க்குப் பிறவற்றைக் காட்டாமல் உடலமைப்பினை மட்டிலும் காட்டி அதனுள் எல்லா நரம்பு களும் காட்டப்பெறுகின்றன. அங்ங்னமே, எலும்பு அமைப் பினைத் தெளிவாக அறிய விரும்புவோர்க்கு ஏனையவற்றை யெல்லாம் காட்டாமல், எலும்புகளை மட்டிலும் புலப்படுத்திப் படம் வரையப் பெறுகின்றது. தசை நார்களை மட்டிலும் அறிய விரும்புவோர்க்கு, அவை மட்டிலும் தெளிவாக இருக்கு மாறு படம் வரையப்பெறுகின்றது. இவற்றால் நமக்கு யாதொரு ஐயப்பாடும் தோன்றுவதில்லை. இவற்றுள் ஒன்றைமட்டிலுமா கொண்டு உடல் உள்ளது என்று நாம் ஐயப்பாட்டுடன் வினவு வதுமில்லை; ஆராய்ச்சி கடத்துவதுமில்லை. இதேமுறைதான் கற்பனையிலும் கையாளப் பெறுகின்றது. அதனால்தான் காவியமும் ஓவியமும், சுவையும் தெளிவும் பெற்றுச் சிறப்பாகத் திகழ்கின்றன. உளவியலார் கற்பனையைப் பலவாறாகப் பாகுபாடு செய்தி உரைப்பர். அவற்றை அறிவதும் சாலப்பயன்தரும். அவற்றை உளவியலில் கண்டு தெளிக. சி. டி. வின்செஸ்டர் என்ற கிலத்திறனாய்வாளர் கற்பனையைப் படைப்புக் கற்பனை,