பக்கம்:பாட்டுத் திறன்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 பாட்டுத் திறன் கின்றாள். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் கவிஞன் சயங் கொண்டான், முலைமீது கொழுநர்கைக் நகமேவு குறியை முன்செல்வ மில்லாத அவர்பெற்ற பொருள்போல் கலைநீவி யாரேனும் இல்லாவி டத்தே கண்ணுற்று நெஞ்சங் களிப்பீர்கள் திறமின்." (கொழுநர் - கணவர்; கலை . மேலாடை, விே-விலக்கி) என்று பாடுவார். இதுவும் இயைபுக் கற்பனையைச் சேர்ந்ததே. கருத்துவிளக்கக் கற்பனை : இனி, மூன்றாவது வகைக் கற்பனையை நோக்குவோம். இயற்கைக்காட்சிகளைக்கண்ணுற்ற கவிஞன் தான் கண்டவற்றை அப்படியே கூறாது அக்காட்சி களால் தன் உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை மட்டிலும் சித்திரித்தால் அதனைக் கருத்துவிளக்கக் கற்பனை என்று கூறலாம். ஒரு நிகழ்ச்சியிலிருந்தோ ஒரு பொருளி லிருந்தோ அதன் ஆன்மிக மதிப்பை அல்லது உட்குறிப்பை மட்டிலும் கண்டு அவையடங்கிய பகுதிகளையோ, அன்றித் தன்மைகளையோ எடுத்துக்காட்டுவது கருத்து விளக்கக் கற்பனையாகும் என்று வின்செஸ்டர் கூறுவர். இத்தகைய கற்பனைதான் கவிதைக்கு உண்மையான உணர்வைத் தருகின்றது. கவிதைத் துறையில் மேதையாக உள்ளவர்கள் தாம் காணும் கிகழ்ச்சிகளையும் காட்சிகளையும் ஒன்றுவிடாது அப்படியே வருணிப்பதில்லை; வருணிப்பதைவிடப் பொரு ளுணர்த்துவதில்தான் அவர்களுடைய கவனம் அதிகமாகச் செல்லும். ஓர் எடுத்துக்காட்டால் இதனை விளக்குவோம். உலக வாழ்வில் கேடும் ஆக்கமும், இறப்பும் பிறப்பும் மாறி மாறி வந்துகொண்டிருப்பதைச் சங்கப் புலவர் ஒருவர் காண் கின்றார். ஒருநாள் வானத்தில் திங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு அதனுடைய வாழ்விலும் கேடு, ஆக்கம், மறைதல், பிறத்தல் ஆகியவை இருத்தல் நினைவுக்கு வருகின்றன. இந்த உண்மையை உணர்த்துவதற்காகத்தான், 14. கலிங்கத்தைாழிசை-18. 15. The interpretative imagination perceives spiritual value or significance, and renders objects by presenting those parts or qualities in which the spiritual value resides—C. T. Winchester,