பக்கம்:பாட்டுத் திறன்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பாட்டுத் திறன் பிண்டத்தின் கருவாம் தன்பேர் உருக்களைப் பிரமன் தந்த அண்டத்தை நிறையப் பெய்து குலுக்கிய தனையது ஆன" என்ற பாடலில் மேற்கூறிய கற்பனை அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்க. ஒரு காட்சியில் காணும் அனைத்தையும் வெளிப்படை யாகக் கூறுவதைவிட அதில் உணர்ந்த பகுதிகளை மட்டிலும் எடுத்துக் காட்டுவது சாலப் பயன்தரும். ஊனக் கண்ணால் பார்க்கும் பொருள்களின் அழகை மனக் கண்ணால் காணும் பொழுது பன்மடங்கு அது சிறந்து பொலிவுறும், மனம் அவ்வழகில் ஈடுபடும் பொழுதுதான் நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சி யுண்டாகின்றது. மனத்தில் எழும் கற்பனையாற்றல் பொருள்களில் பொலிந்து கிற்கும் உணர்ச்சி பாவனைகளை மட்டிலும் தேர்ந்தெடுப்பதால் அவை கம்மனத்தில் சிலையாகப் பதிவு பெறுகின்றன. - - பொதுவாகக் கற்பனை மனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணை யாக அமைகின்றது என்பது உளவியலாரின் கருத்து. மனத்தின் உரம் அதன் கற்பனை யாற்றவில் உள்ளது என்றும், அத்தகைய கல்லுனர்வைத் தருவது கவிதை என்றும் ஆபர்குரோம்பி’ என்ற திறனாய்வாளர் கருதுவர். எனவே, கற்பனையை நன்கு உணர்ந்து கவிதையை அநுபவிக்க வேண்டும் என்றாகின்றது. இவ்விடத்தில் கற்பனையைப்பற்றி பி. அலெக்ஸாந்தர்' என்ற உளவியலறிஞர் கூறியது நினைவுகூர்தற்பாலது ; உளம் அல்லது ஆன்மாவின் ஆற்றலே கற்பனை என்பது; காரணம், அதுதான் மனச்செயல்களனைத்தையும் ஒருங்கு பிணைப்பது. அது புலன்களின்’ ஆணையினின்று விடுபட்டதால் புலன் காட்சியினின்றும் வேறுபட்டது. அது நினைவினின்றும்2 வேறுபட்டது, காரணம், நினைவு முன்னர் அதுபவித்த ஒன்றை இருத்துதலை மட்டிலும் செய்கின்றதேயன்றி, புதிதாக 20. யுத்த மூலபல வகை-222, 21-ஆபர்குசோம்பி-Abercrombe, 22. ti saaršavsås#-P. Alexander. -

  • s, *****-Senses. 24. has so co-Perception: 35. Fostel-Memory. - - - - - .