பக்கம்:பாட்டுத் திறன்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 互55 ஒன்றைப் பெறுவதில்லை. அஃது உள்ளக் கிளர்ச்சியினின்றும்2% வேறுபட்டது; காரணம், கற்பனை ஓர் ஆற்றலேயன்றி ஊக்கி" அன்று. அது புரிந்துகொள்ளுதலினின்றும்” வேறுபட்டது; காரணம், கற்பனை தன்வயமாக்குவதில் செயற்படுவதேயன்றிக் கண்ட பொருளின் தன்மையை நோக்கிக் கோவைப்படுத்துவ தன்று. அது மன உறுதியினின்றும் வேறுபட்டது; காரணம், மன உறுதி29 கடிவாளங் தாங்கிச் செல்லும் தேர் ஒட்டியேயன்றி, கற்பனைபோல் அத்தேரில் இவர்ந்து செல்லும் தலைவன்அன்று. இவை ஒவ்வொன்றினின்றும் கற்பனை வேறுபடினும், அவற்றையும் கற்பனை அணைத்துக் கொள்ளுகின்றது. ஏனெனில், கற்பனை செயற்படுவதற்கு முழுமனமும் செயற்பட் டாக வேண்டும். அழகினால்தான் உலகம் வளர்கின்றது; அழகானவற்றைப் படைத்தலே கற்பனையின் கடமையாகும்.' கற்பனை குழந்தைப் பருவத்தில் இயல்பாகவே அமைந்தது, சிறு வயதில் குழந்தை கற்பனை செய்வதைப் போலவே கவிஞன் கற்பனை செய்கின்றான்; பாக்களைப் படைக்கின்றான். கற்பனையூற்று நம்மிடம் என்றும் சுரந்து கொண்டிருந்தால் தான் கவிதைகளை நன்கு சுவைக்கலாம்; அதுபவிக்கலாம். கற்பனையால்தான், இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர் விருக்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்." என்று சொல்லித் திளைக்கும் அளவுக்குக் கவிதைச் சுவை நம் மிடம் வளரும். 26. உள்ளக் கிளர்ச்சி - Eடிருtion, 27, nur so - Motive. 28. q išš Garsi szép . Understanding. 29. tostro-aust - Wifi. 80. தமிழ்விடு துது - கண்ணி 151