பக்கம்:பாட்டுத் திறன்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

igū பாட்டுத் திறன் புண்டரி கங்கள் பூத்துப் புயல்தpஇப் பொலிந்த திங்கள் மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரியன் னானை கற்றைவெண் ணிலவு நீக்கிக் கருணையாம் அமிழ்தம் காலும் முற்றுறு கலையிற் றாய முழுமதி முகத்தி னானைப் பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெறத்தான் பெற்ற சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியானை." கஞ்சத்துக் களிக்கும் இன்தேன் கவர்ந்துணும் வண்டு போல அஞ்சொற்கள் கிள்ளைக் கெல்லாம் அருளினான் அழகை மாந்தி தஞ்சொற்கள் குழறித் தத்தம் தகைதடு மாறி கின்றார்கற்பினுக் கரசினைப் பெண்மைக் காப்பினைப் பொற்பினுக் கழகினைப் புகழின் வாழ்க்கையைத் தற்பிரிங் தருள்புரி தருமம் போலியை." என்ற பாடல்களையும் பாடற் பகுதிகளையும் பாடிப் பாடி நன்கு சுவைத்து நுகர்ந்து மேற்கூறிய உண்மையை உணரலாம். உணர்ச்சிக் கேற்ற சொற்கள் : தமிழியக்கத்தைச் சார்ந்த ஒரு தொண்டர் மேடைமீது கின்றுகொண்டு உணர்ச்சிமிக்க சொற் பொழிவு நிகழ்த்துகின்றார். அவர் பேச்சில் அவர் மொழிபற்றிய பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் அவ்வவற்றிற் கேற்றவாறு சொற்களும் ஒலிகளும் வருவதைக் காணலாம். அவர்ே வீட்டினுள் சென்று தம் காதலியுடன் பேசும் பேச்சிலும் மழலைமொழி பேசும் தம் குழந்தையுடன் கொஞ்சிப்பேசும் பேச்சிலும் இனிய சொற்களும் குழைவான சொற்களும் ஒலிகளும் வெளிப்படுவதைக் காணலாம். உணர்ச்சி யுடன் பேசும் உரையாடற் பேச்சிலேயே இவை வருவதாயின் உணர்ச்சிக்கு வடிவம் தரக் கூடிய கவிதையில் இவை எவ்வளவு 7. கிட்கிந்தை: மாமரப். 55, 9. கிட்கிந்தை. கோலங்.19. 8. புத்த விபீடி. 186. 19. புத்த மீட்சிப், 80.