பக்கம்:பாட்டுத் திறன்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பாட்டுத் திறன் சொல்லும் மழலையிலே-கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய் முல்லைச் சிரிப்பாலே-எனது மூர்க்கந் தவிர்த்திடுவாய். இன்பக் கதைகளெல்லாம்-உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ? அன்பு தருவதிலே-உனைகேர் ஆகுமோர் தெய்வமுண்டோ? மார்பி லணிவதற்கே-உன்னைப்போல் வைர மணிகளுண்டோ?” சீர்பெற்று வாழ்வதற்கே-உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ?* என்ற பாடல்களில் குழைவான சொற்களும் ஒலிகளும் வருவதைக் காண்க. படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு கடந்து சிறுகை நீட்டி இட்டுங் தொட்டுங் கவ்வியுங் துழந்தும் கெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறையில்லைத் தாம்வாழு காளே." என்ற புறப்பாட்டில் முதலிரண்டடிகள் செல்வருடைய வீட்டின் பெருமிதத்தைப் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன. அடுத்த இரண்டு மூன்று வரிகளில் குழந்தைகளின் கடை முதலியவற் றைப் புலப்படுத்துவதற் கேற்றவாறு சிறுசிறு சொற்கள் அடுக்கி வந்திருத்தலைக் காணலாம். பாட்டைப் படித்து அநுபவிக்கும் பொழுது இவை நன்கு புலனாகும். - வெண்ணரை உடம்பினனாகவும் விதிர்த்த புள்ளினனாகவும கைத் தண்டுன்றித் தள்ளாடிவரும் முதுபார்ப்பான் வடி வின்னாக வரும் சீவகனை நோக்கித் தோகை மயிலொத்த சுரமஞ்சரி வருகின்றாள். 12, கண்ணம்மா.என்.குழந்தை 18. புறம்-188