பக்கம்:பாட்டுத் திறன்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 19? என்று பாடியபின்னர் அச்சொற்றொடரின் பொருளே மாறிவிடு கின்றது; அஃது உலக சகோதரத்துவத்தை உணர்த்துகின்றது. சாதாரணச் சொற்கள் கூடக் கவிதை வடிவு பெறுங்கால் ஒரு தனிப்பட்ட மதிப்பினைப் பெற்றுவிடுகின்றன. இம் மதிப்புடைய சொற்கள் உள்ளவைதாம் கவிதைகள்'; இல்லாதவை செய்யுட் கள்.” இந்த மதிப்பைக் கவிதை மதிப்பு’’ எனக் குறிப்பிடுவர் திறனாய்வாளர். சில சொற்கள் உறவு கொள்ளும் முறையாலேயே புதிய ஒலி யின்பத்தையும், புதிய பொருளுணர்ச்சியையும் தருகின்றன. அங் ங்ணம் அமையும் முறை கவிதை பாடும் கவிஞனுக்கே முதலில் புலனாவதில்லை. கவிதையாக வடிவெடுத்த பிறகு அகராதியில் இல்லாத புதிய பொருளுணர்ச்சியை அவை பெற்று நிற்கும் பொழுதுதான் கவிஞன் அதனைக் காண்பான்; அந்த ஆற்றலை யும் அறிவான். - வெட்டி யடிக்குது மின்னல்-கடல் வீரத்திரை கொண்டு விண்ணை விடிக்குது; கொட்டி யிடிக்குது மேகம்;-கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று; சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்; எட்டுத் திசையும் இடிய-மழை எங்ங்ணம் வந்த தடாதம்பி வீரா! அண்டம் குலுங்குது தம்பி!-தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய்போல் மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர் செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்! கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக் காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!" என்ற பாரதியாரின் பாடலில் பயின்று வந்துள்ள சொற்கள் நாம் யாவரும் அறிந்தவையே, ஆயினும், அவற்றின் அமைப்பும் ஒலியும் ஒரு பெரும் புயலையே நம்முன் காட்டுவனவாக 25. ss of - Poetry. 28. செய் புள் - Verse. 27. *sás»% uāúq - Poetic value, 38. பாரதியார் பாடல்கள் மழை.