பக்கம்:பாட்டுத் திறன்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 199 தர்மத்தைக் கற்பனையில் நிறத்துடன் தோன்றச் செய்வதை உணரலாம். கசை திறக் திலங்கப் பொங்கி கன்றுகன் றென்ன கக்கு விசைதிறக் துருழு வீழ்ந்த தென்னவே தூணின் வென்றி இசை திறந் துயர்ந்த கையால் எற்றினன், எற்ற லோடும் திசை திறந் தண்டங் கீறிச் சிரித்தது செங்கட் சீயம் ? என்ற பாடலைப் படிக்கும்பொழுதே தூணைப் பிளந்து கொண்டு வரும் நரசிங்கத்தை நமது மனக்கண்முன் காண் கின்றோம். புதிய சொற்களின் பிறப்பு : மொழி வளர்ச்சியில் சொற்கள் புதிய பொருளைப் பெறுகின்றன; புதிய மதிப்பையும் அடை கின்றன. இஃது எங்ங்னம்? ஒரு செயலில் ஈடுபடும் பலர் பல் வேறு விதமாகவும் பல்வேறு அளவிலும் ஈடுபடுவர் என்பதை நாம் அறிவோம். என்றாலும், அவர்கள் ஈடுபாட்டைக் குறிப்ப தற்கு ஒரே சொல்தான் உண்டு. எடுத்துக்காட்டாக, நீர் வேட் கையை எடுத்துக்கொள்வோம். ஏனைய பசி முதலிய விடாய் களினும் சிறந்த இது உடனே தணிக்கப்பெறவேண்டிய தொன்றாகின்றது. சாதாரணமாக நாம் விடாய் தோன்றிய வுடன் நீரை அருந்துகின்றோம். சில சமயம் நீர் வேட்கையின் காரணமாக உயிரே போய்விடுகின்ற நிலையும் ஏற்படுகின்றது. அப்பொழுதும் நீரைக் குடிக்கின்றோம். இந்த இரண்டு செயலும் 'பருகுதல்' என்ற சொல்லாலேயே குறிக்கப்பெறுகின்றது. இவ்விரண்டும் செயலால் ஒன்றாயினும், மனநிலையால் கடலனைய வேற்றுமை கொண்டவை. பாலை கிலத்தில் ஒருவன் நீர் வேட்கையால் தவித்து, நீரைக் கண்டவுடன் ஆர்வத்தால் பருகியதைக் கவிஞன் ஒருவன் கண்டான். பின்னர் இக் கவிஞனைப் புரவலன் ஒருவன் அன்பும் ஆர்வமும் கிரம்பிய பார்வையோடு காண்கின்றான். கவிஞன் நீர்விடாய்கொண்டவன் பார்வையை நினைவில் கொண்டு. 'பருகுவ னன்ன அருகா கோக்கமொடு” 32, யுத்த-இரணியன் வதை-127, 88. பொருநராற்றுப்-வரி 17,