பக்கம்:பாட்டுத் திறன்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 303 பேச்சின் ஒலிநயம் முழுவதும் ஒழுங்காகவே இருப்பதில்லை; அதை எப்படி வேண்டுமானாலும் பொருத்தப்பாடடையும்படி செய்து கொள்ளலாம். அழுத்தங்களும் இடை நிறுத்தங்களும் திரும்பத்திரும்ப வருகின்றன; ஆனால் அவை எப்பொழுது வருகின்றன என்பதை முன்னதாகக் கூற முடியாது. இத்தகைய சாதாரணப் பேச்சு எழுத்து வடிவம் பெதுங்கால் உரைகடை யாகின்றது; உணர்ச்சி அல்லது உள்ளக்கிளர்ச்சியற்ற கருத் தினைக் கூறுவதற்கு இச் சாதனம் போதுமானது. ஆனால், உள்ளக் கிளர்ச்சி ஆழ்ந்திருக்கும்பொழுதோ, சினம் அல்லது காதல் உணர்ச்சி கிளர்க்தெழும்பொழுதோ, இப்பேச்சு கல்ல ஒலி கியத்தைப் பெறுகின்றது. உச்சரிப்பழுத்தங்கள் தெளிவான அடையாளங்களைப் பெறுகின்றன; சொற்றொடர்கள் திடீர் திடீரென அமைகின்றன; அவசியமான இடைகிறுத்தங்கள் அடிக்கடி கிகழ்கின்றன. கட்சிக் கூட்டங்களில் பேச்சாளர் உணர்ச்சியுடன் பேசிடும் பொழுது, அஃது அடுக்குச்சொல்: அணிபெற்று, உரைகடையிலிருந்து கவிதை நிலைக்கு உயரப் பார்க்கின்றது. இத்தகைய பேச்சு, உரைநடை ஒலிநயம் எந்தஅளவுக்கு உயரக்கூடும் என்பதை ஏடுத்துக்காட்டுகிறது. ஆழ்ந்த உணர்ச்சியை வெளியிடுவதற்கு உரைநடை ஒலி நயம் போதுமானதன்று. அதற்குச் செய்யுள்' வடிவமே மிகவும் ஏற்றது. இங்கு ஒலிநயம் அளவுடன் அமைகின்றது. அழுத் தங்கள் திரும்பத் திரும்ப நிகழ்வதும் ஒழுங்குடன் அமைகின்றது. இதைத் தெளிவாக அறிந்தால்தான் கவிதையைப்பற்றி காம் கொள்ளும் கருத்து தவறாக அமையாது. செய்யுள்-ஒலிநயம் என்பது சாதாரணக் கருத்து வெளியீட்டின்மீது மேற்கொள்ளப் பெற்ற செயற்கைமுறை யன்று; இன்பமான ஓசையையோ அல்லது அழகான முடிவையோ உண்டாக்குவதற்கு மேற் கொள்ளப் பெற்றதுமன்று. அது தேவையின் பொருட்டு இயல்பாக வளர்ந்த ஒரு சாதனமாகும். - இயற்கையும் ஒலிநயமும்- ஐம்பெரும் பூதங்களின் இயக்க மும் ஒருவித ஒலிநயத்தில்தான் அமைந்துள்ளது. அணுவிலிருந்து அண்ட்ம்வரையிலும் இவ்வுண்மையைக் காணலாம். இன்று கண்டறியப்பெற்ற 23 தனிமங்களின் அணுக்கள் யாவும் கதிரவன் மண்டலத்தைப் போன்றே அமைந்துள்ளன். கதிர 10. செய்யுள் - verse t1, gsitnih - Element