பக்கம்:பாட்டுத் திறன்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 பாட்டுத் திறன் iன்று விடுகின்றன, இங்கிலையில் உறங்குவது போன்ற அநுபவம்-அறிதுயில் அநுபவம்-ஏற்படுகின்றது. உறக்கத் தில் புலன்களின் இயக்கம் கின்று ஒழுங்குடன் இயங்கும் இதயத் துடிப்பு, குருதியோட்டம், மூக்கின் இயக்கம் மட்டிலும் கடை பெறுவதைப் போலவே, பாட்டின் ஒலிநயத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதும் அவ்வுறுப்புகள் மட்டிலும் இயங்கிக் கொண்டுள்ளன. நம் உள்ளம் மட்டிலும் பாட்டின் ஒலிநயத்தில் திளைக்கின்றது. உறக்கத்தில் உள்ளம் இன்பம் அடைந்து ஒர் அமைதி பெறு வதைப் போலவே, பாட்டின் கற்பனையுலகத்திலும் உள்ளம் இன்புற்று அமைதியைக் காண்கின்றது. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே தருகிழலே கிழல்கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணிரே உகந்ததண்ணி ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசேனன் அலங்கலனிங் தருளே.19 என்ற பாடலைக் கொடுமுடி சுந்தராம்பாள் அவர்கள் இராக மாலிகையில் பாடும்பொழுது நாம் மேற்குறிப்பிட்ட அநுபவத் தைப் பெறுகின்றோம். உரைநடையும் பாட்டும் கலந்த நூலொன்றினைப் படிக்கும் நமக்கு இத்தகைய அநுபவம் ஏற்படுகின்றதன்றோ? வாய்க்குள் உரைநடையைப் படித்துக்கொண்டிருக்கும் நாம் இடையே ஒரு பாட்டு வருங்கால், அதன் உணர்ச்சி உள்ளத்திற்கு வரப்பெற்ற தும், வாய்திறந்து பாட்டைப் படிக்கின்றோம். உணர்ச்சி தனக்குத் துணையாக ஒலிநயத்தை காடுவதையே இது காட்டு கின்றது. நாட்டுப்புறங்களில் பாரதம், இராமாயணம், பக்த விஜயம் போன்ற கதைகளைப் படிப்பவர்கள், அவை உரை கடையில் அமைந்திருந்த போதிலும், அவற்றைப் பாட்டுகளைப் படிப்பதைப் போலவே நீட்டி நீட்டிப் படிப்பதை இன்றுங் காண லாம். இக்கதைகளை அவர்கள் அடிக்கடி கேட்டுப் பழகிய காரணத்தால், அக்கதைகளைப் படிக்கத் தொடங்கும்பொழுதே உணர்ச்சி கிரம்பியவர்களாக உள்ளனர். உணர்ச்சி மிக்க அவர் 19. திருவருட்பா.அருள் விளக்கமாலை ஆ.