பக்கம்:பாட்டுத் திறன்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 20ፇ கள் உள்ளம் கதையின் கற்பனையில் நுழைந்தவுடன் ஒலி கயத்தை காடுகின்றது; அவர்களும் இசையோடு ப்ே.டிப் படிக் கின்றனர். - கற்பனையும் ஒலிநயமும் : திருச்சி தேவர் மன்றத்தில் நவாப்பு இராசமாணிக்கத்தின் பக்த ராமதாஸ் நாடகம் கடை பெறுகின்றது. நுழைவுச் சீட்டுப் பெற்று நாம் நாடக மண்ட பத்தினுள் நுழைகின்றோம். நாடக அரங்கில் காம் காண்பன எல்லாம் கற்பனை என்ற எண்ணம் மெல்ல அரும்பி உள்ளத்தை மயக்கத் தொடங்குகின்றது. அரங்கில் காணப்பெறும் பகல், சிலவு, பல நிகழ்ச்சிகள் முதலியவை உண்மை அல்ல என்பதை காம் அறிவோம். நாடக மாந்தரும் கதை மாந்தர் அல்லர் என்ப தும் நமக்குத் தெரியும். ஆயினும், கம் உள்ளம் அவற்றை உண்மையுலகிலிருப்பவையே என்று கம்பி உணர்ச்சி வயப்படு கின்றது. காமும் கதை கடந்த காலத்தில் இருப்பவர்கள்போல் எண்ணிக் கதையில் தொடர்பு கொள்ளுகின்றோம். அங்கனமே, பாட்டின் ஒலிநயமும் உள்ளத்தை மயக்கி கம்மைக் கற்பனை யுலகத்திற்கு ஈர்த்துச் செல்லுகின்றது. கொல்லணைவேல் வரிகெடுங்கண் கெளசலைதன் குலமதலாய்! குனிவில் ஏந்தும் மல்லணைந்த வரைத்தோளா! வல்வினையேன் மனம்.உருக்கும் வகையே கற்றாய்; மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்று இனிப்போய் வியன்கான மரத்தின் கீழல் கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே!’ என்ற குலசேகராழ்வாரின் பாசுரத்தை உள்ளம் கனிந்து பாடுங் கால், ஆழ்வார் தான் தசரதனாக இருந்து புலம்பும் முறையில் பாடியதைப் போலவே, நாமும் தசரதனாகி விடுகின்றோம்; ஆழ்வார் உணர்ச்சியை காமும் பெறுகின்றோம். இதையே உள் வியலார் ஒட்ட உணர்தல்' என்று குறிப்பிடுவர். இதை முன் னோர் இயலில் குறிப்பிட்டுள்ளோம்.செவி ஒலிநயத்தை உணரத் தொடங்கியதும் நம் உள்ளம் கற்பனையை உணர்ந்து பாட்டின் உணர்ச்சியைப் பெறத் தொடங்குகின்றது. 20. நாலாயிரம் பெருமாள் திருமொழி:9:8