பக்கம்:பாட்டுத் திறன்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ló பாட்டுத் திறன் ஆற்றயல் எழுந்த வெண்கோட்டதவத்து எழுகுளிர் மிதித்த ஒரு பழம் போலக் குழையக் கொடியோர் காவே காதலர் அகலக் கல்லென் றவ்வே." (கருங்கால்-கரியகாம்பு; ஒண் பூ-ஒள்ளியபூ; யாணர்-புதுவரு வாய்; அயல்-பக்கம்; கோடு-கிளை; அதவம் - அத்தி;குளிர்கண்டு; கல்லென்ற கல்லென்றவாயின. ஆரவாரித்தன என்பது மாம்.) என்ற பாட்டைப் படிக்குங்கால் மேலேயுள்ள உரை நடையைப் படித்து உணர்வதைப் போலத் தலைவியின் உணர்ச்சியை உணர முடிவதில்லை. ஆனால், பாட்டைத் திரும்பத் திரும்பச் சிலமுறை படித்தால் தலைவியின் உணர்ச்சியை ஓரளவு ஒருவாறு பெற முடி கின்றது. இப்பாட்டிலுள்ள ஒண்பூ, யாணர், வெண்கோட் டதவம், எழுகுளிர், கல்லென்ற போன்ற சொற்களும் சொற் றொடர்களும் இன்றைய தமிழ் வழக்கிலில்லாதவை. எனவே, தலைவியின் உணர்ச்சியை நாம் நன்கு பெற முடிகின்றதில்லை. தவிர, இப் பாடல் ஒலிநயம் குறைந்த ஆசிரியப்பாவில் அமைக் திருப்பதும் உணர்ச்சியை உணர்வதற்கு ஓரளவு தடையாகவே உள்ளது என்றும் கூறலாம். மேற்கூறிய தலைவியின் உணர்ச்சியை ஒலிநயம் மிக்க விருத் தப்பாவில் அமைத்தால் அவ்வுணர்ச்சியை எளிதாகப் பெறமுடி கின்றது; அதுவும் இன்றைய வழக்கிலுள்ள சொற்களில் அமைந்து விட்டால், அறிதல் பின்னும் எளிதாகின்றது. அங்ங்னம் அமைக்கப்பெற்ற இந்தப் பாடலைப் பாருங்கள்: மலர்ச்சூழல் அமர்ந்தினிய வண்டார்க்கும் காலம்; வரிக்குயில்கள் மாவில் இளங் தளிர்கோதும் காலம்; சிலர்க்கெல்லாம் செழுந் தென்றல் அமுதளிக்கும் காலம், தீவினையேற்கு அத்தென்றல் தீவீசும் காலம்; 38. குறுந்தொகை.24.