பக்கம்:பாட்டுத் திறன்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 12 யாப்பு முறை கவிதைகளில் சொற்களுக்கு ஒருவித வேகம் தந்து செழிக்க வைப்பது கவிஞனின் வேலை. கவிதையிலிருக்கும் சொற்கள் தனியான வேகத்தை அடைவதற்குக் காரணம் என்ன? அவ் வேகத்தை அவை எவ்வாறு பெறுகின்றனமுேன் அத்தியாயத்தில் ஒலிநயத்தைப் பற்றிக் கூறினோம் அன்றோ? ஒலிகள் அள வாலும் தன்மையாலும் முயற்சியாலும் வேறுபட்டு ஒழுங்காக அமைந்து, வந்த அமைப்பே திரும்பத் திரும்ப வந்து செவிக்கு இனிமை பயப்பதையே ஒலிநயம் என்று உரைத்தோம். இந்த ஒலிநயம் செயற்கை முறையன்று; அது தேவையின் பொருட்டு இயல்பாக வளர்ந்த ஒரு முறையாகும். கவிதையில் பயிலும் இந்த ஒலி நயத்தை வளர்த்து வாய்பாடுகளாக்கி ஒருவகைச் செயற்கை அமைப்பைக் தந்தனர் நம் முன்னோர். இந்த வாய் பாடுகள் அமையும் முறையையே யாப்பு என்றும் பெயரிட் டனர். வரையறுக்கப்பெற்ற ஒலிநயமே யாப்பு என்பது. கவிதையில் சொற்கள் யாப்பு முறைப்படி ஒருவித வரிசையில் அமையுங்கால் அவை ஒன்றோடொன்று புதிய முறையில் செல் வாக்குப் பெற்றுத் தாம் இருக்கும் இடத்தையொட்டிப் புது வேகத்தையும் புதுப் பொருள்களையும் பெறுகின்றன. போய் விட்டான்' என்று சொல்லுவதற்குப் பதிலாகப் போயே போனான்' என்று சொல்லும்பொழுது, அந்தச்சொற்றொடரில் எவ்வளவு வலுவும் பொருள் வளமும் அமைந்து கிடக்கின்றன! கவிஞன் தான் படைக்கும் கவிதையில் இதைத்தான் செய்கின் றான். சொற்களின் மூச்சை அறிந்து அவற்றைக் கையாளு கின்றான். இராமன் முதலியோரைக் கானகத்தில் விட்டு வந்த சுமந்திரனை நோக்கி கம்பி சேயனோ? அணியனோ? என்று தசரதன் வினவியபோது, சுமந்திரன், 4. to risk: “Metre, 2. வரையறுக்கப்பெற்ற 968; utà-Measured rhythm,