பக்கம்:பாட்டுத் திறன்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேயுயர் கானில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும் போயினன் என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்.” என்று கூறுகின்றான். போயே போனான்' என்ற தொடரில் இருப்பதைவிடப் பன்மடங்கு வேகத்தை இப்பாட லில் உணர முடிகின்றது. பழகிப் பழகி உருவழிந்து மெருகேறிப் போன சொற்களும், கவிதையில் ஏறும்போது நம்மையே ஏமாற்றிப் புத்தம் புதியனவாய்த் தோன்றுகின்றன. அச்சொற் கள் பேச்சுவழக்கிலும் உரை நடையிலும் தாம் பெறும் நிலையை விடக் கவிதையில் உயர்ந்த பதவியைப் பெறுகின்றன; உயர்ந்த அதிகாரத்தையும் அடைகின்றன. சொற்களுக்கு இந்த வேகத்தை யும் வலுவையும் ஊட்டுவதற்கு யர்ப்பு முறை கவிஞனுக்கு ஒரளவு துணையாக இருக்கின்றது. சதுரங்கக் காய்கள் ஒரு குறிப் பிட்ட எல்லைக்குள் உலவுங்கால் அவை புதிய ஆற்றலைப் பெறு வன போலவும், துப்பாக்கியினுள் இருக்கும் தோட்டாக்கள் புதிய தொரு வேகத்தைப் பெறுவன போலவும், கவிதையிலுள்ள சொற்களும் ஒருவித யாப்பு முறையில் அமைந்து அவ்வவற்றிற் குரிய இடங்களிலிருக்கும்பொழுது புதிய ஆற்றலைப் பெறு கின்றன. இதனால் தான் மேற்புலத் திறனாய்வாளர்கள் கவிதை யைச் சிறந்த சொற்களைச் சிறந்த இட்ங்களில், அமைக்கும் கலை யென்றும், மானிட உணர்ச்சிகளைச் சரியான வடிவத் துடனும் ஒலி நயத்துடனும் அமைக்கும் வெளியீடே' யென்றும் கூறுவர். மேலியலில் கவிதைக் கலைக்கு ஒலியைமே அடிபபடையாக உள்ளது என்று கூறினோமல்லவா? உணர்ச்சிக்கு வடிவமாக ஒலி கயமும், ஒலி கயத்திற்கு வடிவமாக உணர்ச்சியும் விளங்கு வது கவிதைக்கலை. இத்தகைய ஒலிநயம் அமைந்த பாட்டின் அடியைச் சீர்கள் என்றும், அசைகள் என்றும், இன்னும் பல விதமாகவும் பாகுபாடு செய்துள்ளனர். இவற்றை நினைவில் வைத்துக் கொள்ளவும் வாய்பாடுகள் அமைத்தனர். இவ்வாறு 8. கம்ப அயோத் தைலமாட் செய் 60. 4. The best words in the best order. 5. The expression of human emotions in perfect form and rhythm