பக்கம்:பாட்டுத் திறன்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 - - பாட்டுத் திறன் வரையறுத்த வாய்பாடுகளே யாப்புமுறை எனப்படும். இது பற்றிய சில விவரங்களைச் சிறிது காண்போம். செய்யுளுறுப்புகள் : தொல்காப்பியர் மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, தாக்கு, தொடை, நோக்கு, பா, அளவியல் முதலிய முப்பத்து கான்கைத் தொகுத்துச் செய்யுள் உறுப்புக ளாகக் கூறுவர். இங்கு நாம் யாப்புக்கு இன்றியமையாதனவாக வுள்ள ஒரு சிலவற்றைமட்டிலும் விளக்குவோம். எழுத்து : எழுத்து உயிரெழுத்து, மெய்யெழுத்து, சார் பெழுத்து என்று மூவகைப்படும். உயிரெழுத்து, குற்றெழுத்து னெட்டெழுத்து, அளபெடை என மூவகைப்படும். மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகைப்படும். சார் பெழுத்து குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என மூவகைப்படும். மெய்யினுட் சிலவும் ஆய்தமும் அளபெடுக்கப் பெறும். மாத்திரை : மனிதனிடம் இயல்பாக உண்டாகுகின்ற கண் ணிமைப் பொழுதும் கைக்கொடிப்பொழுதும் மாத்திரை என்ற வரையறைப் பொழுத்ாகும். குற்றெழுத்தும் ஒற்றளபெடையும் ஒரோஒன்று ஒரு மாத்திரை; நெட்டெழுத்து இரண்டு மாத்திரை; உயிரளபெடை மூன்று மாத்திரை; ஆய்தமும், மெய்யும், குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் ஒரோஒன்று அரை மாத்திரை, ஐகாரக் குறுக்கம் ஒன்றரை மாத்திரை; மகரக்குறுக்க மும் ஆய்தக்குறுக்கமும் ஒரோஒன்று கால்மாத்திரை. ஏறிய உயிரின் அளவே உயிர் மெய்க்கு அளவு, அசை : அசை என்பது எழுத்துகள் சேர்ந்து வரும் முறை; சீர்க்கு உறுப்பாய் வருவது. ஆங்கிலத்தில் Syllable என்று குறிப் பிடப்பெறுவதைப் போன்றது. அது. இது நேரசை, கிரையசை என இரண்டு வகைப்படும். குறிலும் நெடிலும் தனியே வரினும் ஒற்றடுத்து வரினும் நேரசை எனப்படும். குறிலிணையும் குறில் கெடிலும் தனித்தாயினும் ஒற்றடுத்தாயினும் வருவது கிரையசை எனப்படும். எ-டு: கோ , தி.வேங்-தன். (நேரசைகள்). இதில் கோஎனத் தனி நெடில் நேரசையாயிற்று. மி எனத் தனிக்குறில் 6. செய்யுளியல் . நாற்.1