பக்கம்:பாட்டுத் திறன்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J | 323 - பாட்டுத் திறன் அடி தளைகள் ஒன்றும் பலவும் அடுத்துவருவது அடி யெனப்படும். அவ்வடி குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழி நெடிலடி என ஐந்துவகைப்படும். யாப்பருங்கலக்காரிகை நூலார் அடியைச் சீர்களின் எண்ணிக்கை கொண்டு அளவிடுவர்; தொல் காப்பியர் எழுத்துகளை அள்வாகக்கொண்டு வரையறை செய்வர். குறளடி-இருசீரான் வருவது; இது காலெழுத்து முத லாக ஆறெழுத்திறாக வரப்பெறும். சிந்தடி - முச்சீரான் வரும்; இதற்கு எழுத்து வரையறை ஏழெழுத்து முதல் ஒன்பது எழுத்து வரை. அளவடி - நாற்சீரால் வரும்; பத்தெழுத்து முதல் பதினான்கு எழுத்தளவும் இதற்கு எழுத்து வரையறையாகும். அளவடியை நேரடி என்றும் வழங்குவர். நெடிலடி-ஐந்து சீரால் வரும்; பதினைந்து முதலாகப் பதினேழு எழுத்துவரையிலும் இதற்கு எழுத்து வரையறையாம். கழிநெடிலடி - ஐந்து சீரினும் மிக்கு வரும் அடியெல்லாம் இப் பெயர்பெறும்; இதற்கு எழுத்து வரையறை பதினெட்டு எழுத்துமுதல் இருபதெழுத்தளவு வரை. சீருக்கு இத்தனை எழுத்து என்றும் தொல்காப்பியர் வரையறை செய்துள்ளார்; நேரசையை இறுதியாகக்கொண்ட சீர் ஆறெழுத் துக்கு மிகாமலும் இருக்கும். எழுத்துகளைக் கணக்கிடும் பொழுது மெய்யெழுத் துக்களை நீக்கியே கணக்கிடுதல் வேண்டும். தொடை : பல அடிகளிலாயினும் பல சீர்களிலாயினும் எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பதைத் தொடை என லழங்குவர். அது எதுகை," மோனை." முரண், அளபெடை, இயைபு என்றவற்றால் ஐந்து வகைப்படும். இவை ஒவ் வொன்றும் அவை வரும் இடங்களையொட்டி எட்டு எட்டு வகை யாகப் பாகுபாடு செய்யப் பெறும். இவற்றுள் எதுகைத்தொடை என்பது, அடிதோறும் முதலெழுத்து அளவொத்து கிற்க, இரண்டு முதலிய எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது. சிறு பான்மை இன வெழுத்துகளும் எதுகையாம். சில இடங்களில் எதுகைச் சொல்லின் முதலெழுத்திற்கும் இரண்டாம் எழுத்திற் கும் இடையே பிறிதொரு மெய் பெற்று வருவதும் உண்டு; இதனை ஆசிடையிட்ட எதுகை' என வழங்குவர். எ-டு: ஆவேறு, பால்வேறு என்ற விடத்து லகர வொற்றும், காய் மாண்ட, பூமாண்ட என்ற விடத்து யகரவொற்றும் வருவதைப் போன்றன. மோனைத் தொடையாவது, பல அடிகளிலாவது 15: srsions - Rhyme. 16. மோனை . Alliteration,