பக்கம்:பாட்டுத் திறன்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 பாட்டுத் திறன் என்ற நூற்பாவால் அறியலாம். கலியோடு வழங்கிய மற்றொரு பாட்டு வஞ்சிப்பா என்பது. இவையிரண்டற்குமுரிய ஓசை, முறையே துள்ளல், தாங்கல் என்பதாகும். ஏனைய பாக்களை விட இவை இரண்டும் இசையின்பம் மிக்கவை. எப்படியோ இவை செல்வாக்கு இழந்தன. வெண்பாவும் ஆசிரியப்பாவும் வாழ்ந்தன.இவை இரண்டினும் வெண்பா இசையின்பம் மிக்கது. இப்பாக்கள் யாவும் பலவகை உணர்ச்சிகளுக்கு ஏற்பப் பலவாறு ஒசை வேற்றுமைகளைக் காட்டுவதற்கு இடம் தரவில்லை. ஒவ்வோர் உணர்ச்சியிலுமுள்ள பல்வேறு வகைகளையும் இவற்றைக் கொண்டு காட்டுதல் இயலாது. தவிர, வெண்பா விலும் ஆசிரியப் பாவிலும் சிலவகை ஒசைவேறுபாடுகளே உள்ளன. இதனால் இப்பாக்களை மட்டிலும் கொண்டு தனிக் கவிதைகளையும் காவியங்களையும் பாடியவர்கள், உணர்ச்சி களுக்கு ஏற்றவாறு பாட்டின் ஒசைகளை வேறுபடுத்திக் காட்டு வதில் பெரிதும் வெற்றிபெற வில்லை; அப்பாக்களின் யாப்பு முறைகளும் அதற்குப் போதுமானவையாக இல்லை. சங்கப் பாடல்களின் யாப்புமுறை-குறிப்பாக அகவல் யாப்புமுறைசினம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளைச் சரியான முறையில் புலப்படுத்த முடியாமையை அறியலாம். பிற்காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவி னங்கள் தோன்றின. இவை ஒவ்வொரு பாவினுடன் சேர்ந்து பல்வேறு பாவிகற்பங்களைத் தோற்றுவித்துள்ளன. இவற்றுள் விருத்தம் ஒலிநயத்தைப் புலப்படுத்துவதில் தனிச் சிறப்புடன் விளங்குகின்றது. இதனால் இது பெருஞ்செல்வாக்குப் பெற்றுப் பற்பலவகையான ஒலிவேறுபாடுகளுடன் வளர்ந்தது. நாயன் மார்களும் ஆழ்வார்களும் பெரும்பாலும் இவ் விருத்தவனைப் பாக்களை மேற்கொண்டு பக்தி இயக்கத்தை வளர்த்தனர். தேவரும் பொதுமக்களிடம் தம்நூல் செல்வாக்குப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சீவக சிந்தாமணியை விருத்த யாப்பில் அமைத்தார்; இதுதான் விருத்தயாப்பில் தோன்றிய முதல் காப்பியம். பின்னர்த் தோன்றிய கம்பன் தன் இராமாயணத்தில் விருத்தத்தின் எல்லையையே கண்டுவிட்டான் விருத்தமெனும் ஒண்பாவிற்குஉயர் கம்பன்' என்ற புகழும் பெற்றான். கலிவிருத்தம் ஒன்றிலேயே சீர்களைச் சில வேறுவகையாக மாற்றியமைத்துப் பல்வேறு ஒசைகளைப் படைத்தல் இயன்றது;