பக்கம்:பாட்டுத் திறன்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 பாட்டுத் திறன் மேற்கூறியவற்றிலிருந்து கம்பன் தனது அரிய யாப்புத் திறனைக் காட்டுவதற்காக இங்ங்னம் வேறுபடுத்தினான் என்று கருதுதல் தவறு. கவிஞனது கருத்தின் இசை, செய்யுளின் கதியாக உருவெடுத்து வெளிவந்து ஒழுகுகின்றது என்றே கொள்ளுதல் வேண்டும். மேலும், கட்டங்களுக்குத் தக்கவாறும், அங்குக் கூறவேண்டிய கருத்துகளுக்கு ஏற்பவும், விருத்த வகைகள் தாமாகவே மாறுவதுபோல் மாறிவிடுகின்றன. எடுத்துக்காட்டாக, இராமனுக்கும் இராவணனுக்கும் நிகழ்ந்த போரைச் சொல்லி முடித்து இராமனது வாளியால் இராவணன் இறந்துபட்டான் என்பதைக் கூறுமிடத்தில் விருத்தகதியை மாற்றி, - முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் எக்கோடியாராலும் வெல்லப்படாய் எனக்கொடுத்த வரிமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர்பருகிப் புறம்போயிற் றிராகவன்தன் புனித வாளி * என வெற்றியின் பெருங்திறத்தைப் பெருமிதம் கிறைந்த விருத்த வகையால் உணர்த்துவதை அறிக. அன்றியும், காவிய மாந்தர்களின் இயல்புகளுக் கேற்பவும் செய்யுள் வகைகளை வேறுபடுத்தி அமைக்கின்றான். இங்கனம் கவிஞர்கள் தம் உணர்ச்சிகட்கும், தம்முடைய கற்பனைமாந்தர்களின் உணர்ச்சி கட்கும் ஏற்றவாறு பல்வகை விருத்தங்களைப் பயன்படுத்த முடிந்த்து. சிந்தாமணி, கம்ப ராமாயணம், பெரியபுராணம் போன்ற காவியங்களைப் படிப்பவர்கள் இதனை கன்கு Զ- ն:Rf: { {Ջ1{I օ புதியவகைப் பாடல்கள் : பழைய யாப்பு முறைகள் பல் வேறு உணர்ச்சி வேறுபாடுகளைப் புலப்படுத்துவதற்குப் போது மானவை அல்லவென்றும், தாழிசை, துறை, விருத்தம் என்ற பாவினங்கள் தோன்றிய பிறகு இக்குறைபாடு ஓரளவு நீங்கியது என்றும் மேலே கண்டோம். கொச்சகக் கலிப்பாவின் இலக்கணம் கூறும் தொல்காப்பியச் செய்யுளியல் 149 ஆவது நூற்பாவின், 27, இராவணன் வதை.198,