பக்கம்:பாட்டுத் திறன்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பாட்டுத் திறன் பொருள்கள் யாவும் ஒரே மாதிரியாக இருப்பினும் அவை அமை யும் முறையும் ஒழுங்கும் வேறுபட்டவை. அங்ங்னமே, கவிதை யிலும் சொற்களும் உணர்ச்சியும் பொதுவாக இருப்பினும் அவை அமையும் யாப்புமுறை கவிதைக்குத் தனிச்சுவையைத் தரு கின்றது; கவிதையிலுள்ள உணர்ச்சியும் யாப்பு வகைகளின் வேறுபாட்டால் தெளிவாகப் புலனாகின்றது. பண்டைக்காலத்திலிருந்த வெண்பா, ஆசிரியப்பா போன்ற யாப்பு வகைகள் உணர்ச்சிகளைச் சரியாகப் புலப்படுத்துவ தற்குப் போதுமானவைகளாக இல்லையென்றும், தாழிசை, துறை, விருத்தம் போன்ற பாவினங்கள் தோன்றியவுடன் இக் குறை நீங்கியது என்றும் மேலே கூறினோம். சில எடுத்துக் காட்டுக்களால் இதனை விளக்குவோம். மடங்கலிற் சினை.இ மடங்கா வுள்ளத் தடங்காத் தானை வேந்த ருடங்கியைக் தென்னொடு பொருது மென்ப; அவரை ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப்புறங் காணேனாயிற் சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக; அறகிலை திரியா வன்பின் அவையத்துத் திறனில் ஒருவனை காட்டி முறை திரிந்து மெலிகோல் செய்தேனாக!?? என்பது ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் வஞ்சினங் கூறிய போது சினத்துடன் பாடிய பாட்டு. நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட சிறியிலை கெல்லித் தீங்கனி குறியாது ஆதல் கின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீத் தனையே." என்பது உண்டோரை கெடிது வாழவைக்க வல்ல அருநெலலக கனியை, அதன் அருமையைத்தெரிவியாது உண்பித்த அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் உளங்கனிந்து வாழ்த்திப்பாடிய பாட்டு. $7. புறம் - 71 88. புறம்-91,