பக்கம்:பாட்டுத் திறன்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் &35 அருந்தலையிரும்பானர் அகன் மண்டைத் துளையுரீஇ இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர அஞ்சொல்துண் தேர்ச்சிப் புலவர் காவிற் சென்றுவீழ்க் தன்று அவன் அருகிறத்து இயங்கிய வேலே ஆசா கெந்தை பாண்டுளன் கொல்லோ?89 என்பது அதியமான் இறந்துபட்டபொழுது ஒளவையார் கெஞ் சுருகிக் கண்கலுழ்ந்து பாடிய பாட்டு. மேலே கூறிய மூன்று பாடல்களிலும் உணர்ச்சி பெரிதும் வேறுபடுகின்றது என்பதை நாம் அறிவோம்; எனினும், அவ் வேறுபாட்டை அகவல் யாப்பு கன்கு புலப்படுத்த இயலாமை நன்கு புலனாகிறது. இடைக்காலத்தில் பாவினங்கள் தோன்றிய பிறகு இக்குறை நீங்கிவிடுகின்றது. பாட்டின் யாப்பு உணர்ச்சிக் கேற்றவாறு அமைகின்றது. அதையும் காண்போம். கைகேயி தான் கருதிய இரண்டு வரங்களையும் தயரதனிடம் தெரிவித்தவுடன் அவற்றைக் கேட்ட அரசன் சொல்லொணாத் துயரெய்துகின்றான். டிேவி கிலத்தின் இருக்கும்; கிற்கும்; விழும்; ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும் - பாவியை உற்று எதிர் பற்ற எற்ற எண்ணும்; ஆவி பதைப்ப அலக்கண் எய்து கின்றான்.” என்று அவன் படும் துயரத் துடிப்பைப் புலப்படுத்துகின்றான் கவிஞன். கைகேயியின் நெஞ்சுறுதியைக் காணும் அவன் சினங் கொள்ளுகின்றான். ஆகொடி யாய் எனும், ஆவி காலும், அங்தோ ஒகொடி தே அறம் என்னும்; உண்மை ஒன்றும் சாக எனா எழும்; மெய்த ளாடி வீழும்; மாகமும் காகமும் மண்ணும் வென்ற வாளான்" 39. புறம்.285. 49, அயோ, கைகேயி சூழ்வினை செய்.14 41. அrே. கைகேயி சூழ்வினை-21, 22, 28.