பக்கம்:பாட்டுத் திறன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் }3 சொற்களே கவிதைகளைப் படிப்போர் மனத்திலும் அந்தந்த உணர்ச்சிகளை எழுப்ப வல்லனவாகத் திகழும். கவிஞர்கள் வேண்டுமென்றே சொற்களை ஆண்டுள்ளார்கள் என்று கருது தல் தவறு. அவர்கள் சொற்களை ஏற்ற இடம் அறிந்து, வேண்டும் போது எடுத்தாள வல்லவர்கள். ஆங்கிலக் கவிஞ ராகிய ஷேக்ஸ்பியர் பதினையாயிரம் சொற்களையறிந்தவர் என்றும், மில்டன் என்பார் எண்ணாயிரம் சொற்களையறிந் தவர் என்றும் ஆங்கிலத் திறனாய்வாளர்கள் கணக்கிட்டுக் கூறு வர். ஒரு கவிஞரின் சிறப்பும் மதிப்பும் ஆளும் சொற்களின் எண்ணிக்கையால் ஏற்படுவதன்று; அந்தச் சொற்களை அவர் ஆளும் முறையாலேயே அவர் உயர்வும் சிறப்பும் பெற்றுத் திகழ் கின்றார். இதனால்தான் அத்தகைய சொல்வளமுடைய கவிதை களைப் படிக்கும்பொழுது பல்வேறு எண்ணக் கோவைகள் எழுகின்றன. செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.' இதிலுள்ள இல்லாத போழ்து', 'சிறிது, வயிற்றுக்கும் என்பதிலுள்ள உம்மை', 'சய' என்ற சொற்றொடர்களும் சொற்களும் பரிமேலழகரிடம் எத்தகைய எண்ணக்கோவைகளை எழுப்பியுள்ளன என்பதை அவருடைய உரை காட்டுகின்றது. "சுவை மிகுதியும் பிற்பயத்தலுமுடைய கேள்விச் செல்வம் உள்ள பொழுது வெறுக்கப்படுதலான் இல்லாத போழ்தென்றும், (உணவு) பெரிதாய வழித் தேடற்றுன்பமேயன்றி நோயும் காமமும் பெருகுதலாம் சிறிதென்றும், அதுதானும் பின்னி ருந்து கேட்டற் பொருட்டாகலான் ஈயப்படும் என்றும் கூறினார். ஈதல் வயிற்ற திழிவு தோன்ற கின்றது' என்ற பகுதியில் அவற்றை அறிக. இங்ஙனமே, காளென. வொன்றுபோற் காட்டி உயிரீரும் வாள(து)உணர்வார்ப் பெறின்.19 என்ற குறட்பாவின் உரையிலும் இவ்வுண்மையை அறியலாம். காலமென்னும் அருவப்பொருள் உலகியல் கடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளாற் கூறுபட்டதாக வழங்கப்படுவ 15. குதன் கீ.ே 18. குதல் , 334,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/25&oldid=812562" இலிருந்து மீள்விக்கப்பட்டது