பக்கம்:பாட்டுத் திறன்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-13 அணி நலன்கள் கவிதைக்கு அழகு செய்வன அதில் அமையும் அணிகள், ஒரு கருத்தை மொட்டையாகப்-பட்டவர்த்தனமாகச்-சொல் வதை விட அழகாகச் சொல்வது கேட்போருக்கு இன்பம் பயக் கும். யாக்கை நிலையற்றது என்ற உண்மை எல்லார்க்கும் பொது; இதனைக் கற்றவர், கல்லாதவர், பேதையர் அறிஞர் ஆகிய அனைவரும் அறிவர்; மன்பதைக்கே பொதுவான உண்மை இது. இது, படுமழை மொக்குளிற் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கை' என்று கவிஞன் கூற்றாக வெளிப்படுங்கால் அழகுடன் பொலி கின்றது; தனிவீறுடன் திகழ்கின்றது; ஏன்? சாவாத் தன்மை யையும் பெற்றுவிடுகின்றது. இன்னொரு கவிஞனின் கூற்றை யும் காண்போம். காட்டில் நள்ளிரவில் தமயந்தி தாங்கும் பொழுது அவளுடன் உறங்கிய நளன் அவளுடைய ஆடையில் பாதியைக் கிழித்துத் தான் உடுத்திக் கொண்டு அவளை விட்டுப் பிரிகின்றான். விழித்தெழுந்த தமயந்தி கணவன் பிரிவுக்கு ஆற் றாது தலைவிரி கோலமாகத் தரையில் வீழ்ந்த கிலையைப் புக முேக்தி, வான்முகிலும் மின்னும் வறுகிலத்து வீழ்ந்ததுபோல் தானும் குழலும் தனிவீழ்ந்தாள்’ என்று உவமை யொன்றால் அழகுபடக் கூறுகின்றார். பொன் னிற உடலுடன் கூடிய தமயந்தி தலைவிரி கோலமாக இருந்த கிலைக்கு மின்னலும் மேகமும் சேர்ந்து வீழ்ந்த கிலை உவமை யாகக் கூறப் பெற்றுள்ளது. இவ்வாறு கவிஞர்களுக்குத் தம் கருத்தைத் தெளிவாகவும், விளக்கமாகவும் உரைத்தற்குத் துணையாக இருப்பவை அணிகள். ஒரு சில முக்கிய அணிகளை மட்டிலும் சண்டு எடுத்துக்காட்டுவோம். 1, நாலடியார்-21. 2. நளவெண்பா-282.