பக்கம்:பாட்டுத் திறன்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசeடுத்-திறன் 241 உவமை: கண்முன் காணப்பெறும் பொருள்களை ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பு மனிதனிடம் இயல்பாகவே அமைந்துள்ளது. மேலாகப் பார்ப்பதற்குப் பொருள்கள் வெவ்வேறுபோல் தோன் றினாலும், உண்மையில் அவைகளிடையே ஏதாவது ஒரு தொடர்பு இல்லங்கற் போகாது. முதலில் அத்தொடர்பு புலனா காவிடினும், ஆழ்ந்து கவனித்தால் அது விளங்காமற் போகாது. வடிவாலும் உருவாலும் பண்பாலும் பிறவற்றாலும் பெரும் பான்மையான பொருள்கள் தொடர்பு பட்டிருத்தலை அறியும் அளவிற்கேற்ப கம்முடைய அறிவும் ஆழமும் அகலமும் உடையதாகின்றது. சில பொருள்களிடையே இவ்வொப்புமையைப் புலன்களால் அறிதல் கூடும்; சிலவற்றிடம் இஃது அறிவின் துணைகொண்டு மட்டிலுமே அறிதல் இயலும் இன்னும் சில சமயங்களில் ஆழ்ந்து சிந்தித்தும் ஒரோவழி அது பவித்தும் பொருள்களிடையே இவ்வொப்புமையைக் காணவும் நேரிடும். பொருள்களிடையே காணப்பெறும் இவ்வொப்புமை யைக் கவிஞன் கண்ணால் கண்டும், காதால் கேட்டும், அறிவால் அறிந்தும், வாழ்க்கையில் அநுபவித்தும் அறிந்து கூறுகின்றான். இவ்வாறு கவிஞனின் ஒப்பு நோக்கும் முயற்சி கவிதையைச் சிறப் புடைய தாக்குகின்றது. எடுத்துக் காட்டொன்றால் இதனை விளக்குவோம். - இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல் துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள்.' இந்த அழகிய கம்பராமாயணப் பாடலடிகளில் இராவணன் இதுகாறும் செய்த தீமையின் திரட்சி கூனிக்கு உவமையாக வக் துள்ளது. இதில் உவமிக்கப்பெறும் பொருள்களை மனக் கண்ணால் கண்டு அவற்றிலுள்ள ஒப்புமைப் பகுதியை உள்ளத்தால் உணர் கின்றோம். முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்பெறும் இரண்டு பொருள்களில் ஏதாவது ஓர் இயல்பு மட்டிலும் இரண்டிற்கும் பொதுவாக அமைந்து விடுமாயின் அதுவே உவமை மிகச் சிறப் பாக அமைவதற்குப் போதுமானது. யாரும் நெருங்கி அறிவுறுத் தப்பெறாத கிலையிலுள்ளவன் இராவண்ன். அவன் இதுகாறும் உலகங்களுக்கெல்லாம் செய்த தீமைகள் அளவற்றவை; அவை 8. அயோத் மத்த ைசூழ்ச்-39, பா,-16