பக்கம்:பாட்டுத் திறன்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 . பாட்டுத் திறன்

  • தாமரை முகம்' என்று கூறும்பொழுது இரண்டு சொற்களாக விட்டிசைப்பதையும் முகத்தாமரை' எனும்பொழுது ஒரு சொல் லாகி இரண்டினைச் சார்ந்த தனித்தனி யுணர்ச்சிகளும் ஒருங்கி ணைந்து ஆற்றல் மிக்க உணர்ச்சியாய் வளர்வதையும் காணலாம். இதனைத்தான், உருவகம் என வழங்குகின்றனர்.பால்செறிந்து பனிப் பாலாடை (ice Cream) ஆவதுபோல், அடங்கிச்செறிந்த உவமையே உருவகம் ஆகின்றது.’ இவ்வளர்ச்சியால் கவிதை பெறும் பயன் பெரிது. கவிஞன் ஒரே கல்லில் அனைத்தையும் பெற விழைகின்றான்; திறமைமிக்க கவிஞனாயின் அதில் வெற்றியும் பெற்றுவிடுகின்றான்.

மன்னர் விழித்தா மரையூத்த மண்டபத்தே பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் ' என்ற அடிகளில் தமயந்தி, சுயம்வரம்,காள் அன்று ஐம்பத்தாறு நாட்டு மன்னர்களும் நளன் உருக்கொண்டு வந்திருந்த நான்கு தேவர்களும் பிறரும் விழித்தகண் இமையாது காத்திருக்கும் கொலுமண்டபத்திற்கு வருவதைப்புகழேந்தி வருணிக்கின்றான். இதில் விழித்தாமரை பூத்த மண்டபம்’ என்ற உருவகத்தில் காட்டும் காட்சியினை எண்ணி மகிழ்க. கரும்புச்சாறு திரண்டு பாகாகிக் கற்கண்டு நிலையைப் பெறும்பொழுது கற்கண்டு சுவை மிகுந்து காணப்பெறுவதுபோலவே, உவமையும் சுருங்கி அடங்கி உருவகமாக வெளிப்படுங்கால், அந்த அடக்கத்தில் புதிய ஆற்ற லும் சுவையும் பிறப்பது ஒரு விந்தையேயாகும். பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் பார்த்தன் பாஞ்சாலிக் குப் பரிதி எழில் காட்டும் கட்டத்தில், பார்; சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட்டு எரிவன: ஓகோ! என்னடி இந்த வன்னத்து இயல்புகள்! எத்தனை வடிவம் எத்தனை கலவை: தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்!- வெம்மை தோன்றாமே எரிங் திடும் தங்கத் தீவுகள்!. பாரடீ! 12 Metaphor is nothing but compressed simile—M.R Ridley in his “Poetry and the Ordinary Reader” p. 64. 18. நளவெண்பா-131,