பக்கம்:பாட்டுத் திறன்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத்திறன் آمات Yാജ് 253 இலக்கண நூலார். இந்தப் பாடலில், பழம், காய் முதலியவை மீனுக்கு உணவாதல் சிறப்புப்பொருள். பெரியோர்கள் அடியோடு அழிந்தாலும் தம் வண்மைக் குணத்தில் ஒழியார்' என்பது பொதுப்பொருள். கவிஞர் இங்குச் சிறப்புப் பொருளைப் பொதுப்பொருளால் வைத்து முடிக்கின்றார். தற்குறிப்பேற்றம் : வாலி தன்மீது பாய்ந்த அம்பைப் பிடுங்கி அதில் பொறித்துள்ள இராமன்' என்ற பெயரைக் காண் கின்றான். இல்லறந்துறந்த நம்பி தங்கள் பொருட்டு வில்லறத் தையும் துறந்தனனோ என்று நகைத்து காணத்துடன் கிற்கும் வாலியின் முன்னர் இராமன் வருகின்றான். கண்ணுற்றான் வாலி நீலக் கார்முகில் கமலம் பூத்து மண்ணுற்று வரிவில் ஏந்தி வருவதே போலும் மாலை " என்று வாலி இராமனைக் கண்டதைக் கூறுகின்றான் கவிஞன். இங்கு இயல்பாக நிகழும் தன்மையில் கவிஞன் கருத்தினை ஏற்றிக் கூறியுள்ளான். பொருள்களிடத்து இயல்பாக நிகழும் தன்மையில் கவி தன் கருத்தினை (குறிப்பினை) ஏற்றிக்கூறுவது. தற்குறிப்பேற்ற அணியாகும். இயல்பாக இராமன் வாலிமுன் வருவதைக் கவிஞன் வானத்திலுள்ள லேக் கார்முகில் தன்னிடம் தாமரை மலர்பூத்து நிற்க, கட்டமைந்த வில்லொன்றைக் கையில் ஏந்திகொண்டு வரும் திருமால்' என்று தன்னுடைய கருத்தினை ஏற்றிக் கூறியிருப்பதைக் காண்க. - அணி இலக்கணங்கள்: உவமை, உருவகம் போன்ற அணி களைப் போன்றே வேற்றுப்பொருள் வைப்பு, தற்குறிப்பேற் றம் முதலிய அணிகளும் தத்தம் அளவில் மிகாது பயன்படு. மாயின், அவையும் கவிதையைச் சிறப்பிக்கும். இங்ான்னம் தொடக்கத்தில் பொருள் விளக்கத்தின் பொருட்டு எழுந்த அணி களை அவை கவிதைக்கு அழகு செய்யவே தோன்றின என்று பிற்காலத்தில் மக்கள் தவறாகக் கருதலாயினர். அத்தகைய அணிகளுக்கு இலக்கணமும் வகுக்க முற்பட்டனர். அந்த முயற்சி யின் பயனாக ஏற்பட்டதே அணியிலக்கணம் ஆகும். இடைக் காலத்திலிருந்த சில அறிஞர்கள் வடமொழியில் கற்ற அலங்கார 4ே. கிட்கித் 兹 வாலிவதை • 8i.