பக்கம்:பாட்டுத் திறன்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத்-திறன் یچوےo255 ۳ کین (علوی) آ. சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, மற்றவை செய்யுட் கண்ணே அணியாமென இக்காலத் தாசிரியர் நூல் செய்தாரு முளர். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணியென்று இலக்கணம் கூறப்படா; என்னை: தாம் காட்டிய இலக் கணத்திற் சிதையா வழியும் வல்லார் செய்யின் அணியாகியும் அல்லார் செய்யின் அணியன்றாகியும் வரும்...அல்லது உம், பொருளதிகாரத்துட் பொருட் பகுதிகளெல்லாஞ் செய்யுட்கு அணியாகலான்...அவையெல்லாம் தொகுத்து அணியெனக் கூறாது வேறு சிலவற்றை வரைந்து அணியெனக் கூறுதல் பயமில் கூற்றாம்...அவற்றைப் பொருளுறுப்பு என்பதல்லது அணியென்பவாயின், சாத்தனையும் சாத்தனா லணியப்பட்ட முடியும் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல, அவ்வணியுஞ் செய்யுட்கு வேறாதல் வேணடும்...செய்யுட்கு அணி செய்யும் பொருட் பட்ை எல்லாங்கூறாது சிலவே கூறியொழியின் அது குன்றக் கூறலாம்.’’ என்ற பேராசிரி யரின் உரைப்பகுதி இதனை நன்கு விளக்குகின்றது. இது கருதியே தொல்காப்பியர் அணிகளை அறுபதும் நூறுமாக வகுத்துப் பாகுபாடு செய்யாது பல அணிகளுக்கு அடிப்படையாகவுள்ள உவமை என்ற ஒன்றினை மட்டிலும் நன்கு விளக்கினார். தொல்காப்பியத்தில் உவம இயல்' என்ற ஒன்றைத் தவிர அணியைக் கூறும் வேறு பிரிவே இல்லை. உவமையிலிருந்தே ஏனைய அணிகள் தோன்றின என்பதை, உவமை என்னும் தவலருங் கூத்தி பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய அரங்கிற் கவினுறத் தோன்றி யாப்பறி புலவர் இதயம் ப்ேபறு மகிழ்ச்சி பூப்ப கடிக்குமே." என்ற வடமொழி அப்பைய தீட்சிதரின் சித்திர மீமாம்சைக் கூற்றினாலும் அறியலாம். கவிதைகளில் உவமை முதலிய அணிகளைச் சிறந்த புலவர் கள் முயன்று சேர்ப்பதில்லை, அவர்கள் கற்பனையில் ஒரு தன்மையாகத் தோன்றி இயையும் பொருள்கள் தாமே வந்து 23. உவமவியல் நூற். 87, பேராசிரியர் உ ை . 26. செந்தமிழ்-தொகுதி-7; பக்கம் 144,