பக்கம்:பாட்டுத் திறன்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 பாட்டுத் திறன் என மோனைத் தொடைகள் எட்டாகும் என்றும், இங்ங்னமே ஏனையவை நான்கும் ஒவ்வொன்றும் எட்டெட்டாகும் என்றும் அறிகின்றோம். இவற்றுடன் அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை என்ற மூன்றும் சேர்ந்து தொடைகள் காற்பத்து மூன்றாகும் என்று கூறுவர் யாருப்பருங்கலக் காரிகை யாசிரியர். மோனை : இவற்றைச் சில எடுத்துக்காட்டுகளால் விளக்கு வோம். - மாவும் புள்ளும் வதிவயிற் படர மாநீர் விரிந்த பூவுங் கூம்ப மாலை தொடுத்த கோதையும் கமழ மாலை வந்த வாடை மாயோ ளின்னுயிர்ப் புறத்திறுத்தற்றே." இதில் அடிதொறும் 'மா' என்ற முதலெழுத்து ஒன்றிவரத் தொடுத்தமையின் இஃது அடிமோனைத் தொடையாகும். பிறவற்றிற்கும் இவ்வாறே வந்துழிக் கண்டு கொள்க. அணிமலர் அசோகின் தளிர்கலங் கவற்றி அரிக்குரற் கிண்கிணி அரற்றுஞ் சீறடி அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள் அவிர்மதி அனைய திருநுதல் அரிவை அயில்வேல் அனுக்கி அம்பலைத்து அமர்ந்த கருங்கயல் நெடுங்கண் நோக்கமென் திருந்திய சிந்தையைத் திறைகொண்டனவே." இதில் முதலடியில் இணைமோனையும், இரண்டாம் அடியில் பொழிப்பு மோனையும், மூன்றாம் அடியில் ஒருஉ மோனையும், நான்காம் அடியில் கூழைமோனையும், ஐந்தாம் அடியில் மேற்கதுவாய் மோனையும், ஆறாம் அடியில் கீழ்க்கது வாய் மோனையும், ஏழாம் அடியில் முற்றுமோனையும் வந்துள்ளமையைக் காண்க. ஏனையவற்றிற்கும் இவ்வாறே வந்துழிக் கண்டு கொள்க. - 1. யாப்பருங்கலக்காரிகை-19 இன் கீழ்க் கசட்டப்பெற்றுள்ளது. 2. யாப்பருங்கலக்காசிகை-20 இன் கீழ்க் காட்டப்பெற்றுள்ளது.