பக்கம்:பாட்டுத் திறன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் fö தொடர்பு போலப் பலர்க்கும் எடுத்துக் காட்டித் தாற்றக் கூடியன தலைவிபால் பல உள என்று கூறி அவன் செலவை அழுங்குவிக்கின்றாள். மணக்குங்கால் மலரன்ன ததையவாய்ச் சிறிதுே தனக்குங்கால் கலுழ்பான கண்ணெனவும் உளவன்றோ சிறப்புச்செய்துழையராப் புகழ்போற்றி மற்றவர் புறக்கொடையே பழிதுளற்றும் புல்லியார் தொடர்புபோல்: ஈங்குநீர் அளிக்குங்கால் இறைசிறந் தொருநாள்நீர் நீங்குங்கால் நெகிழ்போடும் வளையெனவும் உளவன்றோ? செல்வத்துள் சேர்ந்தவர் வளனுண்டு மற்றவர் ஒல்கிடத் துலப்பிலா உணர்விலார் தொடர்புபோல்: ஒருகாள்கீர் அளிக்குங்கால் ஒளிசிறங் தோரு நாள் நீர் பாராட்டாக் கால்பசக்கும் துதலெனவும் உளதன்றோ? பொருந்திய கேண்மையின் மறையுணர்க் தம்மறை பிரிங் தக்கால் பிறர்க்குரைக்கும் பீடிலார் தொடர்புபோல் 118 மேற்கூறிய தாழிசைகளில் முறையே தலைவியின் கண்கள், வளைகள் துதல் ஆகியவை தலைவனது கொடிய செயலைத் து ற்றி விடும் என்று கூறுகின்றாள். கண்களுக்குப் புறங் கூறுவாரும், வளைகளுக்கு உணர்விலாரும், துதலுக்குப் பீடிலாரும் உவமைகளாக அமைந்துள்ளனர். இத்தகைய நுட்பமான மனநிலைகளைச் சங்கப் புலவர்கள் அகவற் பாக்களிலும் பாடியுள்ளனர்; கலிப்பாக்களிலும் பாடியுள்ளனர். கலிப்பாக்களில் இவ் வுணர்ச்சிகள் வடிவம் பெற்றதைப்போல் அகவற்பாக்களில் பெறுவதில்லை. மேற்கூறிய தாழிசைகளை யதுகுல காம்போதி ராகத்தில் படித்துப் பார்த்தால் உண்மை புலனாகும். இக் கருத்துகளை ஆசிரியப்பாவில் அமைத்தால் பொருள் விளங்குமே யன்றி உணர்ச்சி பிறக்காது. காரணம், அதில் கருத்திற்கும் உணர்ச்சிக்கும் ஏற்ற ஒலிநயம் இல்லாமையே. எனவே, ஒலிநயமும் உணர்ச்சியும் உள்ள கவிதையே தலையாயது என்பது அறியக்கிடக்கின்றது. விருத்தப் பாக்கள் வளர்ச்சிபெற்ற பிறகு இவ்வுணர்ச்சி பின்னும் சிறப்பெய்து கின்றது. உணர்ச்சிகளுக்கேற்றவாறெல்லாம் விருத்த நடையை மாற்றியமைத்துக் கொள்ள முடிகின்றது. ஒலிநயம், யாப்பு: 18. பாலைக் கலி. 25. 19, usûu. - Metre.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/27&oldid=812608" இலிருந்து மீள்விக்கப்பட்டது