பக்கம்:பாட்டுத் திறன்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பாட்டுத் திறன் அடியின் இறுதியில் ஒரசை ஒன்றி வந்தாலே போதும் என அமைவர். அவர்கள் ஒரசையில் வரும் எதுகையை ஒற்றை எதுகை' என்றும் (இஃது ஆணெதுகை), ஈரசையில் வரும் எதுகையை இரட்டை எதுகை' என்றும்(இது பெண்ணெதுகை) பாகுபாடு செய்வர். அங்கு மூன்றுசிர் நான்குசீர் எதுகைகளும் உள்ளன. அங்கு அடியின் இறுதிச்சீர் ஒன்றி வருதலே அதிக மாகப் போற்றப்பெறும். தமிழில் அடியின் முதற் சொல்லில் அவ்வாறு ஒன்றிவருதலே சிறப்பாகப் போற்றப் பெறுகின்றது. மேற்குறிப்பிட்ட பாடல்களில் மூன்றாவதில் 'பந்துகள்சந்தம்' என்ற சொற்களில் அடி எதுகை (இரண்டாம் எழுத்து ஒன்றிவருதல்) இருத்தலைக் காண்க. அஃது அடி எதுகை யாகும். பேர்படைத்த விசயனுடன் மும்மைகெடும் பிறவியினும் பிரியா னாகிச் சீர்படைத்த கேண்மையினால் தேரூர்தற் கிசைந்தருளும் செங்கண் மாலைப் பார்படைத்த சுயோதனற்குப் படையெடேன் அமரி லெனப் பணித்த கோவைக் கார்படைத்த கிறத்தோனைக் கைதொழுவார் பிறவாழிக் கரைகண் டனரே...' என்னும் விருத்தப் பாட்டில் அடி எதுகை நான்கு சீர்களிலும் அமைந்துள்ளது; படைத்த' என்ற சில மெய்யும் சில உயிரும் ஒன்றிவருதலை நோக்குக. திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் கருவே ஏறுத்தபின் யாவரையும் கண்டதில்லை அருவாய் உருவமு மாயபிரான் அவன்மருவுக் திருவாரூர் பாடிகாம் தெள்ளேணங் கொட்டாமோ...' என்னும் திருவாசகத்தில் ஒரு மெய்யும் ஓர் உயிரும் (ர் + உ) ஒன்றிவருகின்றன. ஆசிரியப்பா முதலியவற்றில் இரண்டடியில் மட்டும் அடி எதுகை அமைந்தால் போதும் என்று கூறுவர். ii. 9; so p srgusos, - Single rime 12. stotis» — si ziso + - Double rime. 18. வில்லியா, கிருட்டினன் துனது . செய்-1. 14. திருவாசகம் திருத்தெள்ளேனம்.2.