பக்கம்:பாட்டுத் திறன்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 289 இஃது உமாதரன்' என்ற ஒரு சொல்லானே நான்கடியும் மடக் கிய இயமாவியமகம் ஆகும். திரிபுச் செய்யுளாவது, முதலெழுத் தொழிய இரண்டு முதலான எழுத்துக்கள் அடிதோறும் ஒத்திருக் கும்படி பொருள் வேறுபடப் பாடப்பெறுவது. சிந்தா ரத்தின் செக்கை யணிந்தாள் தெளிநூல்யாழ் அந்தா ரத்தி னேர்வரு சொல்லா ளறைதும்பி கந்தா ரத்தி னின்னிசை பாடிக் களிகூரும் மந்தாரத்தின் மாலை யலம்பும் மகுடத்தாள்." இலங்காதேவியின் இயல்பைக் கூறும் இப்பாடலில் அடி தோறும் முதலெழுத்து மாத்திரம் வேறுபட்டிருக்க, இரண்டா வது முதலிய சில எழுத்துக்கள் ஒன்றி கின்று பொருள் வேறுபட் டிருப்பதைக் காண்க. சில சமயம் கம்பன் போன்ற பெருங்கவிஞர்களும் இச்சொல் வித்தையை மேற்கொள்வதுண்டு. எங்கோ ஒன்றிரண்டு இடங் களில் சொல் வித்தையைக் காட்டித் தமக்கும் இவ்விளையாட்டுத் தெரியும் என்பதைப் புலப்படுத்துவர் அவர்கள். - அஞ்சு வனத்தி னாடை யுடுத்தா ளரவெல்லாம் அஞ்சு வணத்தின் வேக மிகுத்தா ளருளில்லாள் அஞ்சு வணத்தி னுத்தரி யத்தா ளலையாரும் அஞ்சு வனத்தின் முத்தொளி ராரத் தணிகொண்டாள்.' இச்செய்யுளின் அடிதோறும் முதலில் சிலவெழுத்துகள் ஒன்றி நின்று வெவ்வேறு பொருள் விளைத்தன. இதில் முதலடி யிலுள்ள அஞ்சு வணம்-ஐக்து கிறங்கள்; இரண்டாமடி யிலுள்ள அஞ்சு உவனம்-அஞ்சத்தக்க கருடன்; மூன்றாம் அடியிலுள்ள அம் சுவனம்-அழகிய, பொன்; நான்காம் அடி யிலுள்ள அம்சு வள் ருத்து-கடல்நீரில் தோன்றிய அழகிய பெரிய சங்கு என்று பொருள் படுவதை அறிக. இப்பாடலும் மேற்காட்டிய பாடலைப் போல் இலங்காதேவியின் தன்மை யைக் கூறுவது. பொழிலிறுத்த படலத்திலும் இத்தகைய சில பாடல்களைக் காணலாம். இவை பெரிய காவியமாளிகையில் வாண வேடிக்கைகள்போல் காட்சியளித்துத் திகழ்கின்றன. 38. கந்தச. ஊர் தேடு.செய்-80. శ్రీ? டிை.செய்.19,