பக்கம்:பாட்டுத் திறன்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-15 குறிப்புப் பொருள் கவிதைச்சுவையில் ஈடுபடுவார்க்கு அச்சுவையை மிகுவிப்பது கவிதைகளில் அமைந்து கிடக்கும் குறிப்புப் பொருளாகும். ஆழ்ந்த அறிவில்லாதவர்கள் குறிப்புப் பொருளை அறிதல் அருமை. குறிப்புப் பொருள் என்பது, சொற்பொருளுக்குப் புறத்தே தோன்றுவது;மணியடித்தால் அம்மணியோசையின்பின் நுட்பமாகியதோர் ஒசை உண்டாதல் போல,கவிதையைப் படித்த வுடன் கவிதை உணர்த்தும் பொருள் மேதுமனத்தில் பதிவதுடன் அப்பொருளுக்குப்பின் கவிஞனின் சொல்லாற்றலால் தோன்றும் துட்பமான பொருள் அது. குறிப்புப் பொருள், இலக்கணம் முத லிய கருவி நூல்களின் துணைகொண்டு அறியப்படுவது அன்று; அறியவும் முடியாது. கவிதைச் சுவையினை அறியவல்ல கல் லுணர்வுடையார் மட்டிலும்தான் அதனை அறிந்து மகிழமுடியும். வடநூலார் குறிப்புப் பொருளைத் தொனி ("த்வகி') என்று வழங்குவர். அவர்கள் தொனியைப் பொருள் தொனி (வஸ்து த்வங்) அணித்தொனி (அலங்கார த்வசி), சுவைத்தொனி (ரஸ் த்வகி),பாவத்தொனி என்று நான்கு வகையாக வகுத்து அவற் றைப் பலவாறாக விரித்துக் கூறியுள்ளனர். இவற்றுள் பின் னைய இரண்டும் சிறப்புடையவை. பேரறிஞராகிய ஆனந்தவர்த் தனா. சாரியர் என்பவர் குறிப்புப் பொருளின் சிறப்பினை யுணர்ந்து த்வங்யா லோகம்' என்ற தனி நூலொன்றினை எழுதி, யுள்ளார். அதன்பின்னர் அவர் கொள்கையைப் பின்பற்றி வேறு பல நூல்கள் தோன்றியுள்ளன. , . - * ‘ » „ * ・・・。 - வடமொழியில் இத்தகைய நூல்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னரே தமிழ்மொழியில் குறிப்புப் பொருள் தொல் காப்பியம் என்ற இலக்கணத்தில் இடம் பெற் - றுள்ளது. ஆனால், அது சிறப்பாகவும் விரிவாகவும் கூறப்பெற விலலை. தொல்காப்பியருக்குப் பின்னர் வந்த ஆசிரியர்களில் பா-18 - ...