பக்கம்:பாட்டுத் திறன்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 3?5 காது. உவமையில் வரும் பொருளை ஊன்றுகோலாகக்கொண்டு அதற்கு ஒப்பான வேறு பொருளை ஆழ்ந்து சிந்தித்துத் தான் உணர்ந்துகொள்ள வேண்டும். உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகென உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்.” என்பது தொல்காப்பியர் கூறும் விதி. ஒர் எடுத்துக்காட்டால் இதனை விளக்க முயல்வோம். கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை ஊழுறு தீங்கனி உண்ணுகர்த் தடுத்த சாரற் பலவின் சுளையோடு ஊழ்படு பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல் அறியாது உண்ட கடுவன் அயலது கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது கறுவி அடுக்கத்து மகிழ்ந்துகண் படுக்கும் குறியா இன்பம் எளிதின் கின்மலைப் பல்வேறு விலங்கும் எய்தும் நாட!”. (கோள் இலை-வளமான இலைகளையுடைய கோள் மிகு. காய்த்தல் மிக்க; ஊழ்உறு - முதிர்ச்சியுற்ற; உண்ணுகர்-உண் போர்; சாரல் - பக்கமலை; ஊழ்படு சுளை - முற்றிய சுளை: தேறல்-தேன்; கடுவன்-ஆண்குரங்கு; கறிவளர் சாந்தம்-மிளகுக் கொடிபடர்ந்த சந்தன மரம்; ஏறல் செல்லாது-ஏறுதல் மாட் டாது; நறுவி அடுக்கம்-கறிய பூக்களாலாகிய படுக்கை, கண் படுக்கும-துரங்கும்.) என்பது அகப்பாட்டின் ஒருபகுதி. ஒருநாள் தலைவன் பகலில் தலைவியைச் சந்திக்க வந்தபொழுது தோழி தலைவனை விளித் துப் பேசியதாக அமைந்தது இது தலைவனுடைய காட்டின் வளத்தைக் கூறுவதாக அமைந்ததுள்ளது. 'கின்னுடைய காட் டில் நல்ல செழித்த வாழைகள் மிகுந்திருக்கும். பெரிய வாழைக் குல்ைகளிலுள்ள வாழைப்பழங்கள் வடித்துத் தேனைச் சொட்டிக் கொண்டிருக்கும். உண்பவர்க்கு நறுஞ்சுவை பயக் கும் பலாப்பழங்கள் மிகுதியாக அங்குக் காணப்பெறும். அவ் வருக்கைப் பலாச் சுளையிலிருந்தும் தேன் வடிந்து கொண்டிருக் 2. தொல் பொருள் அகத்திணை நூற் 51. (இளம்) . 8, அகம் . . . - . -