பக்கம்:பாட்டுத் திறன்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 2?? சொல்லும்பொழுது வருணனையின் உள்ளே அடிப்படையில் வேறொரு கருத்து உறைந்திருக்கும். வருணனையில் வரும் பொருள்கள் அவற்றுக்கு ஒப்பான வேறொரு கருத்தை அறிவ தற்குப் பயன்படும் உவமைபோல் இருக்கும். இவ்வாறு உள்ளுறை உவமத்தில் வரும் பொருள்களைக் கொண்டு வேறு ஒரு பொருளை கினைக்க முடிவதால் இலக்கண ஆசிரியர்கள் உள்ளுறை உவமையை உவமப் போலி என்ற மற்றொரு பெயராலும் வழங்குவர், ஒரு முக்கிய குறிப்பு ஈண்டு அறியத் தக்கது. உள்ளுறையை அமைக்கும்போது கருப்பொருள்கனில் தெய்வத்தைத் தவிர ஏனையவற்றைத்தான் அமைப்பது வழக்கம். தமிழர்கள் தம் வாழ்க்கையுடன் தெய்வத்தைச் சார்த்திப் பேசி அதன் சிறப்பைக் கெடுக்க விரும்பிற்றிலர். தொல்காப்பியரும் இதனை, உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை கிலனெனக் கொள்ளும் என்ப குறியறிங் தோாே.* என்ற விதியால் குறிப்பிடுவர். உவமப் போலி என வழங்கப்பெறும் இவ்வுள்ளுறை ஐந்து வகைப்படும் என வரையறுத்துப் பேசுவர் தொல்காப்பியர். அவை வினை. பயன், மெய், உரு, பிறப்பு என்னும் ஐந்து பற்றி வரும். பொய்கைப் புள்ளிப் புலவுகாறு நீர்நாய் வாளை நாளிரை பெது உம் ஊர் எங்கலக் தொலைவ தாயினும் துன்னலம் பெரும்பிறர்த் தோய்ந்த மார்uே." என்ற அகத்துறைப் பாடல் பரத்தையிற் பிரிந்து வந்த தலை மகனோடு தலைமகள் புலந்து கூறுவதாக அமைந்தது. இதில் 'பொய்கையாகிய தாய இடத்திற் பிறந்த நீர் காயானது, தான் முதல்நாள் தின்ற வாளைமீனின் புல ால் நாற்றத்தோடும் பின்னைநாளிலும் அதனையே விரும்பிப் பெறும் ஊரனே' எனத் தலைவனை விளிக்குமுகமாக, அத்தலைவன் கல்ல குலத்தில் பிறந்தும் இழிகுலத்தாராகிய பரத்தையரைத் தோய்ந்து பின்னும் அவரையே காடிச் சேர்தலைக் கருதியுணர 4. தொல்.பொருள்.அகத்தினை சற். 50 (இளம்), 爵。 ஐங்குறு-:ே -