பக்கம்:பாட்டுத் திறன்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3?8 பாட்டுத் திறன் வைத்தமையின், இது பிறப்புப் பற்றி வந்த உள்ளுறையுவம மாகும். இவையெல்லாம் கருதிக் கூறினால்தான் செய்யுள் சிறப்பாக அமையும் என்றும், இக்கருத்தின்றி நீர்காய் வாளை பெறு உம் ஊரன்' என வறிதே கூறின் ஒரு பயனும் விளை யாது என்றும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் கருதினர். எனவே, அவர்கள் இவ்வுள்ளுறை யுவமத்தால் திணையுணரும் முறை யினைச் சிறப்பாக வற்புறுத்துவாராயினர். இங்ங்னமே வினை, பயன், மெய், உரு என்பனபற்றி வரும் உள்ளுறைகளையும் கருதியுணர்க. அவற்றிற்குரிய எடுத்துக் காட்டுகளை அகத்து றைப் பாடல்களில் கண்டு கொள்க. இந்நூலாசிரியரின் 'அகத்திணைக் கொள்கைகள்' என்ற நூலிலும் காண்க." உள்ளுறை யுவமம் கூறுங்கால் தலைவன் முதலியோர் கூறும் முறைகளையும் இன்னின்னார்தாம் உள்ளுறை யுவமம் கூறுவதற்கு உரியவர்கள் என்றும், அங்கனம் கூறும்பொழுது யார்யார் எப்பொருளை அமைத்துக் கூறவேண்டும் என்றும் விதிகளை வகுத்துள்ளார் ஆசிரியர் தொல்காப்பியர். பெரும் பாலும் இவ்வுவமை அகவாழ்வில் நேரிடும் இன்பதுன்பங்கள் பற்றியே வரும். ஆசிரியர் தொல்காப்பியர், இனிதுறு கிளவியும் துணியுறு கிளவியும் உவம மருங்கில் தோன்றும் என்ப" என்று இதனைப்புலப்படுத்துவர். தலைமகள் உள்ளுறை யுவமங் கூறின் அவள் அறிந்த கருப்பொருள்களை மட்டிலும் அமைத்துக் கூறுவாள்; காரணம், அவள் அதிகமாக வெளியில் அலைந்து திரிந்தவள் அல்லள். தோழி அதிக தூரம் செல்லும் பழக்கம் இல்லாவிடினும் தலைவி உறையும் கிலத்தைப்பற்றி நன்கு அறிந்திருப்பாளாதலால், அங்கிலத்திலுள்ள எல்லாக் கருப் பொருள்களையும் அமைத்து உள்ளுறை உவமை கூறுவாள். தலைமகன உளளுறையுவமம கூறுங்கால தனது உரனுடைமை தோன்றச் சொல்லுவான்; எல்லா கிலத்துப் பொருள்களும் இவன் கூற்றில் அமையும். அங்ங்னமே கற்றாய், செவிலி, பாங்கன், பாணன் முதலியோர் சொல்லுங்கால், இடம் வரை யறுக்கப்படாது தாம்தாம் அறிந்த சொல்லாலும், லம்பெயர்க் துறையாத பொருளாலும், அங்கிலத்துள்ள பொருளாலும் 6. இயல் 27 7. தொல்-பொருள்-உலவியல்-துத் 80. (இனம்).