பக்கம்:பாட்டுத் திறன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுத் திறன் f P ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே." என்ற பாடலில் கோசரின் குழ்ச்சி தோழி செய்த சூழ்ச்சிக்கு உவமையாக வந்துள்ளது. ஈண்டு உவமையிற் காட்டிய கோசர் சூழ்ச்சி கொண்கான வேள் கன்னன் வளர்த்த நறுமாமரத்தைக் கொன்று நாட்டிற் போக்கற்கு அவர் செய்த சூழ்ச்சியாகும். நன்னன் உண்டார்க்கு மீண்ட ஆயுளை தருவதென்று தான் கேட்ட துணியினால் ஒரு கறுமாவைப் போற்றி வளர்த்து அது பழுக்கும் அமயம் பார்த் திருக்தான். அஃது ஒரு காய் காய்த்தது. அது முற்றிப் பெருங் காயாக இருக்கும் நிலையில் காற்றால் அடியுண்டு அண்மையில் ஓடும் யாற்றில் வீழ்ந்தது. அவ்வமயம் யாற்றில் ரோடிய கோசர்குடிப் பெண்ணொருத்தி அதனை எடுத்துத் தின்றனள். காயை கன்னன்பால் சேர்ப்பியாது அவள் உண்ட தவற்றிற்காக அவளுடைய தமர் ஒன்பதிற்றொன்பது களிற்றொடு அவள் கிறையளவான பொற்பாவை கொடுக்க ஒருப்பட்டும் அவற்றைக் கொள்ளாது கன்னன் அவளைக் கொலைபுரிந்தான். இக் கொடுமையைப் பொறாத கோசர் இத் திங்கு விளை தற்குக் காரணமாயிருந்த நறுமாவினை அழித்துத் தொலைக்க ஒரு குழ்ச்சி தொடங்கினர். அவ்வூர் அகுதை தங்தை பாடல் வல்ல மகளிர்க்குப் பிடிப் பரிசில் மிகுந்து கல்கினான். அவனிடம் அகவன் மகளிர் பலரைப் புகுவித்து அவன்பால் அவர்கள் பெற்ற பிடிகள் பலவற்றையும் கன்னன் ஊரிலில்லாத சமயம் அவனது இறுமாம் பொழிலில் பிணிக்கச் செய்தனர். பிடிகள் தம் வழக்கப் படி அம் மாமரத்தின் அடி மண்ணை உதைத்து வாரியிறைத்து அதுவே வேரோடு யாற்றில் விழும்வண்ணம் செய்தது. அதனைப் பலர் முறித்து காட்டில் விறகாகக் கொண்டுபோயினர். இம் மரத்தினொரு காயைத் தின்ற தவற்றிற்கு ஒரு மகளைக் கொலை செய்த நன்னன் இம் மர்த்தையே தொலைத்த அகவன் மகளிர் பலரை இவன் என் செய்வன், காணலாமென்று கோசர் செய்த சூழ்ச்சி இது. மேற்கூறிய வன்கட் சூழ்ச்சியைப் போன்ற ஒன்றையே தான் மேற்கொண்டதாகத் தோழி தலைவியிடம் கூறுகின்றாள். 21. س-نوی قویt8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/29&oldid=812652" இலிருந்து மீள்விக்கப்பட்டது