பக்கம்:பாட்டுத் திறன்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 2?g உள்ளுறை யுவமம் கூறுதற்குரியர் என்பது தொல்காப்பியர் கருத்து. இந்த உண்மைகளையெல்லாம் உளங்கொண்டு அகத் துறைப் பாடல்களைப் பயின்றால்தான் அப் பாடல்களின் முழு அதுபவமும் நமக்கு ஏற்படும்; பாடல்களின் சுவையையும் எட்டிப் பிடிக்க முடியும். * உவமைதான் எல்லா அணிகளிலும் எளிமையானது; ஏனைய அணிகட்குத் தாய்போன்றது. கவிஞன் தான் கூறும் ஒன்றற்கு விளக்கம் தர வேண்டியும், அப்பொருளினிடத்து உள்ளே அமைந்து கிடக்கும் ஓர் இயல்பையோ பல இயல்பு களையோ எடுத்துக் காட்டவேண்டியும் உவமையைக் கையாளு வான். இவ்வாறு சாதாரணமாகக் கவிஞர்களிடம் சிறந்த கவிதைக் கருவியாக இலங்கும் உவமைகூறும் இயல்பு தமிழ்க் கவிஞர் களிடம்-சிறப்பாகச் சங்கக் கவிஞர்களிடம்-சிறந்த முறையில் பண்பட்டுக் கிடந்தது. அந்த இயல்பை அவர்கள் சிறந்த முறை யில் வளர்த்து கயம்படக் கூறும் உள்ளுறை உவமைகளை அமைத்துப் பாடல்களை ஆக்கினர். உள்ளுறை அமைந்த பாடல் கள் சங்கத் தமிழின் இணையற்ற மணிகள்; பயில்வார் காவில் தேன் சுரக்கச் செய்து புலமை வளத்தை கல்கும் அற்புத ஊற்றுகள். . இறைச்சிப் பொருள் : இனி, இறைச்சிப் பொருளை நோக்கு வோம். வடநூலார் இறைச்சிப் பொருளை வ்யங்க்யம்' என்று குறிப்பர். அது சொற்பொருளினும் சிறந்திருக்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் இறைச்சியின் இணக்கணத்தை, இறைச்சி தானே பொருட் புறத் ததுவே." என்ற நூற்பாவால் கூறுவர். சொற்பொருளுக்குப் புறத்ததாக இருக்கும் பொருளே இறைச்சி என்பது. இஃது உள்ளுறை யுவ மத்தைவிட மிகவும் நுட்பமானது. இறைச்சியை உடனுறை' என்றும் தொல்காப்பியர் குறிப்பர். இலக்கணக் கடலைக் கரை கண்டுணர்ந்த பன்மொழிப் புலவர் திரு. வே. வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்கள், இறு'தங்கு என்பதன் அடியிற்பிறந்த பெயர் இறைச்சி என வந்திருக்கவேண்டும் என்று கருதுவர். எடுத்துக்காட்டு ஒன்றால் இறைச்சிப் பொருளை விளக்க முயல்வோம். - ... ." - 8. தொல் :ொருள் - பொருளி நூற். 38. (இளம்).