பக்கம்:பாட்டுத் திறன்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

383 பாட்டுத் திறன் துறந்து-கடந்து; காமம்-அச்சம் தரும்: பேர்தந்து-தாண்டி; விழு மம்-துன்பம்; வழிநாள்-மறுநாள்; ஊறு-இடையூறு: இழுக்குவர் -தவறு எய்துவர்; உலமால்-மனம் சுழலுதல்; உறுதும்-அடை வோம்; வாங்கு அமை-வளைந்த மூங்கில், கண் இடை-கனுக் கட்டு கடுவான இடம்; கடுப்ப-ஒக்க, யாய்-செவிலித்தாய்; எம் படப்பை-எம் தோட்டத்தினையடுத்துள்ள; கொடுந்தேன்-வட்ட மாகிய தேன் கூடு; கோடு-சிகரம்; களிப்பில்-மரச்செறிவில்; பொதும்பு-புதர்.) இப்பாடலில் தோழி தலைவனை இரவுக்குறி விலக்கிப் பகற்குறிக் கண் வருமாறு கூறுகின்றான்; இரவில் வருகின்ற தலைவனைப் பகலில் வரும்படி சொல்லுகின்றாள். இங்கு, “எம்படப்பைக் கொடுந்தேன் இழைத்த கோடுஉயர் நெடுவரைப் பழந்துங்கு களிப்பில் காந்தள் அம் பொதும்பில்.’ என்பதில் தோழி பகற்குறி அமைக்கின்றாள். என்றாலும், தேன் அழிப்பதற்கு வருவாரும்,பழம் எடுப்பதற்கு வருவாரும், பூப்பறிப்பதற்கு வருவாரும் பலராகலின், பகலிலும் வாராதி; வரைந்து கொண்டு செல்' என்பது குறிப்பு. இதுதான் இறைச் சிப் பொருள்; வடநூலார் கூறும் தொனி. இந்த இறைச்சிப் பொருள் சொற்பொருளினும் சிறந்து விளங்குவதைக் கண்டு மகிழ்க. இவ்வாறு விதியினால் விலக்கல் தோன்றுதலேயன்றி, விலக்கினால் விதிதோன்றுதலும், விதியினால் இரண்டும் இன் மையும், விலக்கினால் இரண்டும் உண்மையும் உண்டு. அவற்றை வந்துழிக்கண்டு கொள்க. "அகத்திணைக் கொள்கைகள்' என்ற நூலிலும் காண்க." - சொற்பொருளுக்குப் புறத்தே தோன்றும் பொருள்தான் இறைச்சியாகும் என்று மேலே கூறினோம். இறைச்சிப் பொரு ளினின்று தோன்றும் பொருளும் உண்டு. வடநூலார் இதனை அனுரணன. த்வனி என்பர். ஒரு பொய்கையின் நடுவில் ஒரு கல்லை எறிந்தால், அதனால் ஓர் அலைதோன்றி, அதிலிருந்து ஒவ்வொன்றாகப் பல அலைகள் தோன்றிக் கரைவரைக்கும் வரு வன போல, கவிதையிலும் ஒரு பொருளிலிருந்து பல பொருள் 10. சுப்பு செட்டியா , ந: அகத்திணைக் கொள்கைகள்-இயல்.28