பக்கம்:பாட்டுத் திறன்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 283 கள் தோன்றுவதுண்டு. இவ்வாறு தோன்றுவதை வீசிகரங்க கியாயம் என்பர் வடநூற் புலவர். தொல்காப்பியரும், இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெளியு மோர்க்கே ". என்று விதி கூறியுள்ளார். இதற்கு உரை கூறும் இளம்பூரண ரும் சொற்பொருளுக்குப் புறத்தே தோன்றுவதாகிய இறைச்சிப் பொருளினின்று தோன்றும் பொருளும் உள' என்று உரை கூறுவர். அஃதாவது, குறிப்புப் பொருளினின்று தோன்றும் குறிப்புப் பொருளும் உண்டு என்பது இதன் கருத்து. பொருளு மாருளவே என்று கூறுவதால், இவ்வாறு தோன்றும் பொருள் சிறுபான்மையாகவே இருக்கும் என்பது போதருகின்றது. 'திறத்தியல் மருங்கில் தெளியு மோர்க்கே என்பதால், இப் பொருளை உணரும் ஆற்றலுடையாரும் சிலரே என்பதும் பெறப்படுகின்றது. வடநூலாரும் குறிப்புப் பொருளை அறி தலே அருமை என்று கூறியுள்ளது ஈண்டு ஒப்பு நோக்கி உணர் தற்பாலது. - ஓர் எடுத்துக்காட்டால் இதனை விளக்க முயல்வோம். எல்லா உதுக்காண் எழில்நீர்ப் பொய்கைப் பரந்த தாமரைப் பாசடைக் குருகு துளக்கமில் உடல தாகிப் பசுங்கலத்து வளையொளிர்க் தாஅங் கொளிசெய்வதுவே. (எல்லா-தலைவனே உதுக்காண்-அதேபார்; எழில்அழகு; பொய்கை-குளம், பாசடை-பசுமையான இலை; குருகுகாரை; துளக்கமில்-அசையாத, வளை-சங்கு.) என்பது பொய்கை ஒன்றினை வருணிக்கும் ஒரு பாடல்; தலை வனை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது. பசிய தாமரை இலையிலுள்ள நாரை அசையாது இருக்கின்றது என்பது துளக்கமில் உடலதாகி என்பதன் சொற்பொருள். அதனால் அந்த இடம் மக்கள் நடமாட்டம் இல்லாதது' என்ற குறிப்புப் பொருள் தோன்றும். அக்குறிப்புப் பொருளிலிருந்து 'அவ்விடம் குறியிடத்திற்கு ஏற்றது' என்னும் குறிப்பும், அதனால் புணர்ச்சி கெடிது நிகழ்தல் கூடும் என்ற குறிப்பும் தோன்று வதை அறிக. $1. نة مياه . பொரு பொருளியல் - நாற் 34: