பக்கம்:பாட்டுத் திறன்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் #87 கடலோ மழையோ முழுநீலக் கல்லோ காயா கறும்போதோ படர்பூங் குவளை நறுமலரோ நீலோற் பலமோ பானலோ விடர்சேர் மடவார் உயிருண்ப தியாதோ வென்று தளர்வாள்முன் அடல்சேர் அசுரர் நிறம்போலும் அந்தி மாலை வந்ததுவே,’ (மழை-காளமேகம்; லேக்கல்-இந்திர நீலத்தின்மலை; நறும்போது-மணமுள்ள பூ; குவளை-கருங்குவளை, பானல்கருநெய்தல், இடர்-துன்பம், அடல்-வலிமை) ‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள் என்ற காட்சிக்குப் பிறகு அக்திமாலையில் சீதாப் பிராட்டிபடும் "விரகவேதனை கவிக்கூற்றாக இப்பாடலில் காட்டப் பெறு கின்றது. கடல், கார் மேகம், முழுலேக்கல், காயா நறும்போது குவளை, நீலோற்பலம், கருநெய்தல் ஆகிய ஏழும் கட்புலப் படிமங்களாக இராமபிரானது திருமேனியைக் காட்டுகின்றன. மேலும், இருள் பரவா கிற்கச்செக்கர் வானத்தினைக் கொள்ளும் அந்திமாலை, கருகிறத்தோடு உடம்பெங்கும் செம்பட்ட மயிரைக் கொண்டிருக்கும் அசுரர் சிறத்தினைப் புலப்படுத்தும் கட்புலப் படிமமாகும், பாடல் முழுதும் கட்புலப்படிமங்கள் கிறைந்துத்விதையைக் கவினுறச் செய்கின்றன. ஆதித் தனிப்பொரு ளாகுமோர்;-கடல் ஆகுங் குமிழி உயிர்களாம்;-அந்தச் சோதி யறிவென்னும் ஞாயிறு-தன்னைச் சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்;-இங்கு மீதிப் பொருள்கள் எவையுமே-அதன் மேனின்ற் தோன்றிடும் வண்ண்ங்கிள்-வண்ண நீதி யறிந்தின்பம் எய்தியே-ஒரு つ நேர்மைத் தொழிலில் இயங்குவார்." என்பது பாரதியாரின் கண்ணன் பாட்டில் வரும் ஒருபகுதி. இதில் கடல், குமிழி, ஞாயிறு, கதிர்கள் போன்றவை விண்ண வடிவக் கட்புலப் படிமங்கள்; இவை கவிதைக்கு எழிலூட்டுவன. 8. கம்பரா. பால. மிதிக ல-85 4. கண்ணன்.எ ன் சற்குரு