உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டுத் திறன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் இடர்ப்பட்டு ஒரோரமயத்துக் குறிசெய்து கூடுதலை மறுத்து வரைந்து எப்பொழுதும் அணைந்திருத்தலைக் குறித்துத் தோழி இச் சூழ்ச்சியினை மேற்கொள்ளுகின்றாள். தலைவன் வரை வொடு வருதற்பொருட்டே கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் சிறிது புரிகின்றாள். ஊரும் நம் ஐயரும் இக் களவறிதல் காட்டிப் பகற்குறி மறுத்ததும், தாயும் கமரும் அறிதல் காட்டியும் காவல் மிகுதி காட்டியும் இரவுக்குறி மறுத்ததும் யான் புரிந்த சூழ்ச்சியாகும்' என்று தோழி தலைவியிடம் கூறுகின்றாள். இங்ங்னம் மறுத்தால் தலைவன் விரைந்து வரைவொடு வருவான் என்பதையும் குறிப்பிடுகின்றாள். இங்ங்னம் தோழி தலைவி.பாலும் தலைவன்பாலும் இரக்கங் காட்டாது இப்போது மறுத்ததாலும் அது பிறிதொன்று கருதிச் செய்யப்பட்டதனாலும் அவள் செய்த சூழ்ச்சி வன்கட் சூழ்ச்சியாயிற்று. பல்லோர் அறிந்த கோசரின் சூழ்ச்சி உவமை யாக வந்து தோழியின் நுட்பமான சூழ்ச்சியை விளக்கி சிற்றல் அறிக. இங்ங்ணம் நற்றிணை, அகநானூறு, கலித் தொகை போன்ற அகப் பொருட் பாடல்களில் புறப்பொருள் உவமையாக அமைந்து பாடலின் பொருளை விளக்கி கிற்கின்றது. - அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு22 என்ற குறட்பாவில் கல்வி காமத்திற்கு உவமையாக வந்திருத் தலும் ஈண்டுச் சிந்தித்து மகிழ்வதற்குரியது. அறிவின் ஆழத் திற்கும் அகலத்திற்கும் ஓர் எல்லையில்லாததைப் போலவே, தலைவியிடம் தான் பெற்ற இன்பத்திற்கும் ஓர் எல்லை யில்லாமையைத் தலைவன், தன்னாராமையைக் கூறுவதாக இக்குறள் அமைந்துள்ளது. இங்ஙனம் உவமையேயன்றி வேறு சில அணிகளும் கவிதையை எங்ங்னம் சிறப்பிக்கின்றன. என்பதையும் இந்நூலில் காணலாம். தொடை நயங்கள் : தொடை வகை என்பது எழுத்துச் சொற்பொருள்களை எதிரெதிர் கிறுத்தித் தொடுக்கப்பெறுவன வாகிய தொடை விகற்பம். தொடை என்பது மாலையைக் குறிக்கும். இது பூத் தொடைபோலக் கவிதையைப் பொலிவு செய்கின்றதாதலின் தொடையெனப்பட்டது. 83. குறள் 1118.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/30&oldid=812675" இலிருந்து மீள்விக்கப்பட்டது